இளைத்த உடல் பருமனாக..!! இருக்கிறது மந்திரம்..!!!
நேந்திரன் உடல் பருமன்
நேந்திரன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உண்டாகும். ஆகாரத்தை மேல் ஆர்வம் உண்டாகும் என்பதால் தான், இளைத்த உடலுக்கு நேந்திரன் கொடுக்க உடல் பருமன் ஆகும் என்று சொன்னார்கள். உண்ணும் உணவும் நல்ல ஜீரணம் ஆகும். உடல் இளைத்தவர்கள் இந்த பழத்தை ஆவியில் வேக வைத்து நெய், தொட்டு உண்டால் உடல் தடித்து அழகு பெரும்.
பச்சை வாழை குளிர்ச்சி
குளிர்ச்சி தன்மை கொண்டது தான் பச்சை வாழை என்னும் இந்த நாடன் பழம். இதை அனைவரும் சாப்பிடலாம். ஆனால் வாத நோய்க்கு ஒத்து கொள்வதில்லை. சீதள சரீரம் உள்ளவர்களுக்கும் இது ஒத்து கொள்ளாது.
மொந்தன் வாழை பித்தத்தை போக்கும்
உடல் உஷ்ணத்தை சமன் படுத்தி, பித்தத்தை போக்கும் இந்த மொந்தன் வாழை, காமாலை குணப்படுத்தும்.
பூவன் பழம் உடலுக்கு பலம்
இரவு உணவை தவிர்த்து மூன்று பூவன் பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து வெண்ணீர் குடிக்க உடலுக்கு நல்ல பழம் தரும். மலச்சிக்கலை போக்கும். ரத்த விருத்தி உண்டாகும். உடலுக்கு சக்தி அளிப்பதில் இதற்கு நிகர் வேறில்லை அவ்வளவு பலம் கொண்டது.
ரஸ்தாளி பழம் அஜீரணத்தை போக்கும்
ரஸ்தாளியை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், அஜீரணம், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று போக்கு, சரியாகும். ருசியும், சத்தும் நிறைந்தது.
செவ்வாழை பழம் நரம்புக்கு பலம்

இதை உண்பதால் புதிய மனிதனாக முடியும். சுறுசுறுப்பும், மனதில் உற்சாகம் உண்டாகும். நரம்புக்கு நல்ல பலம் தரும். இந்த அறிய, பெரிய சக்திகளை கொண்டது. வாழைகளின் ராஜா. நோயை எதிர்த்து அளிக்கும் சக்தி கொண்டது. பல்,எலும்பு போன்ற உறுப்புகளை வலிமைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஒரு மண்டலம் இதை சாப்பிட புதிய ரத்தம் உருவாகும். மற்ற பழங்களில் இது சிறந்தது. பல வியாதியை குணப்படுத்தும் சக்தியை கொண்டது.
தினமும் படுக்க போகும் போது வாழை பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் வராது. உடல் மென்மை அடையும். இது போன்ற பொது தன்மை எல்லா வாழை பழங்களிலும் உள்ளது. சோடியம், கால்சியம் குறைவு. மங்கனீசியம், பொட்டாசியம் அதிக அளவில் உள்ளன. உடலின் சமநிலையை காக்கும். ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்க கூடிய வாழை பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் இயல்பாகும்.