சமையல் குறிப்புமருத்துவம்

உடலின் நச்சு தன்மையை போக்க பீன்ஸ் சாப்பிடுங்க..!!

பீன்ஸ் சிறந்த மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. ரத்த குழாய் அடைப்பை போக்கி, ரத்தத்திலுள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தமாக்குகிறது பீன்ஸ். இருதய அடைப்பை போக்கி, உயர் ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சருமத்தை பாதுகாத்து, உடலுக்கு குளிர்ச்சி தரும். நாவறட்சி, இருமல், கைகால் நடுக்கத்தை போக்கும். பல் வலியை போக்கி, வாத,பித்தம்,கபம் மூன்றும் சீராக வைக்கும்.

நீண்ட நாள் புண்களை குணமாக பீன்ஸ் வேகவைத்த நீரை கொண்டு புண்களை கழுவி வந்தால் நாளடைவில் ஆறிவிடும். மேலும் வேகவைத்த நீரை கொண்டு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். மூலம் உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்க்க நல்ல மருந்தாகும். பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய துடிப்பை சீராக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வாய்வு தொல்லை நீக்கி, இரைப்பை பிரச்னை சரி செய்து, இரும்பு சத்தை கிரகித்து, செரிமான சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி, தயாமின் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள வேதிப்பொருள் கண்ணையும், சருமத்தையும், புற ஊதா கைதிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும். வைட்டமின் பி 12, சத்து கருவுற்ற பெண்களின், கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து உள்ள பீன்ஸ் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைத்து, கொழுப்பை சத்தாக மாற்றுகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து 100 கிராம் பீன்ஸ் ல் உள்ளது. இந்த நார்சத்து, குடலின் உட்புற சுவரை பாதுகாத்து நச்சு தன்மையை வெளியேற்றும். பீன்ஸ் கலோரி அளவு குறைவாகவும், தாதுக்கள், வைட்டமின் அதிகமாகவும் உள்ளது. நார்சத்து அதிகம் உள்ளதால் நச்சுதன்மையை வெளியேற்றும்.

நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள் ஒவ்வொன்றிலும் எதோ ஒரு விசேஷ சத்துகள் உள்ளன. இதில் பீன்ஸ் அதிகம் பயன்படுத்தபடுகிறது, நாம் சாப்பிடும் உணவில், தானியம், மாமிசம் இடம் பெரும். இதில் எதை சாப்பிட்டாலும், அவற்றுடன் காய்கறி, பழங்கள் சேர்த்து உன்ன வேண்டும். இதனால் சீரான உணவு, சத்துள்ள உணவாக அமையும்.

மேலும் படிக்க

உடல் சூட்டை தணிக்கும் கோவக்காய்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *