ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

ஆரோக்கியத்தின் அடிப்படை காரணம் சுவை

ஆரோக்கியத்தின் அடிப்படை காரணம் சுவை. இது அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுவை கூடும் போது அதன் விளைவை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் அவங்கவங்க கற்றுக்கொண்டதை பாடம் நடத்துவதை விட நோய் இல்லாத வாழ்க்கை வாழ வழி காட்டுவதே சிறப்பு.

ஐம்பொறிகளையும் இயக்குவது நம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம், சருமத்தின் தன்மை வைத்தே, ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்று சொல்வதுண்டு. இவை வெறும் வாய் மொழிகள் மட்டுமல்ல.

ஆழமான அர்த்தங்களை கொண்டவை. நமது ஆரோக்கியமும் ஒருவிதமான முதலீடு என்று சொல்ல வேண்டும். எதை எங்கே? எப்படி? முதலீடு செய்கிறோம் என்பதைப் பொருத்து தான் அதற்கான பிரதி பலன் கிடைக்கும்.

அதாவது என்ன சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? எந்த அளவு சாப்பிடுகிறோம்? என்பதைப் பொருத்தே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சமச்சீரான முதலீடே நல்ல வருவாயை ஈட்டித்தரும்.

அதேபோல் சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவை ஆரோக்கியத்திற்கு அடிப்படை. இது கூடுதலாக மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வேலைத் திறனையும் கொடுக்க வல்லது.

நோய்க்கான காரணங்களை கண்டறிந்து களைவது தீர்வு காண வழி என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். எப்பொழுதும் உணவில் ருசிக்காக அதிகப்படியான மசாலாக்களை கண்டிப்பாக உங்களால் நாக்கினால் சுவையை ருசிக்க முடியாது.

அதிகப்படியான உமிழ் நீரை திறந்து கொண்டு வயிற்றை கட்டாயமாக அடைந்து விடும். உணவில் ருசியை மிதமாக பயன்படுத்துங்கள். காரச்சுவை விழுங்குவதால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

இனிப்பு சுவை அதிகமாக சேர்க்கப்படும் போது வயிறு பாதிக்கக் கூடும். உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும். புளிப்புச் சுவை அதிகம் சேர்க்கும் போது நாக்கினால் ருசிக்காமல் வயிற்றுக்குள் விழுங்குவதால் கல்லீரல் பாதிக்க வாய்ப்புள்ளது.

நாம் உண்ணும் உணவில் நோய் ஏற்படுவதில்லை. நாம் எடுத்துக் கொள்ளும் சுவையை வைத்து தான் நோய் ஏற்பட காரணமாக அமைகிறது, என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சக்தி இருக்கிறது.

நாம் உண்ணும் சுவை தான் அந்த சக்தியை அளிக்கிறது. அளவை மீறும் பொழுது அந்த உறுப்பு பலவீனமாக மாறுவதற்கு காரணமாக அமையும். விளைவாக கழிவு தேக்கம் எப்பொழுது சுவை அளவை மீறும் என்றால் நான்கில் ஒரு சுவையை யோசிக்காமல் வயிற்றுக்குள் சென்றால் அங்கு தான் அளவானது மீறப்படுகிறது.

உதாரணமாக இனிப்பு சுவையை நாக்கின் ருசிக்காமல் விழுங்க வயிறு மற்றும் மண்ணீரல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே ருசியின் மீது கவனமாக இருங்கள். எந்த ஒரு நோய் வந்தாலும் சுவையை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் நம் கையில் தான் உள்ளது. எனவே இனி கவனமாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *