கர்நாடகாவில் தொடரும் பதற்றம்..!! 144 தடை உத்தரவு நீட்டிப்பு..!!
கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இது மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக போலீசார் ஆறு பேரை கைது செய்ததோடு, சுமார் 12 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரத்து வருகிறது.
இதற்கிடையே துங்காநகரில் இன்று காலை தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் காஷிஃப், நாடிம், ஆசிப் மற்றும் ரிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் இருபது வயதுடையவர்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களின் பின்னணி மற்றும் பிற விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய காவல்துறை நெருங்கி வருவதாக கர்நாடக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி உறுதியளித்துள்ளார். இதனிடையே, சிவமோகா நகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.