பாஜ்ஜி பர்த்டே இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஹாப்பி பர்த்டே ஹர்பஜன்சிங். பிக் பாஸ் சீசன் 3 புகழ் லோஸ்லியா பாஜ்ஜியின் பர்த்டே ஆன இன்று இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹர்பஜன் சிங்
3 ஜூலை 1980 இல் பிறந்த ஹர்பஜன்சிங் (எ) பஜ்ஜி/பஜ்ஜு பா இந்த வருடம் 41வது வயதுக்குள் நுழைகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளர். ஸ்பின்னராக பல விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பிரபலமான பந்துவீச்சாளராக இவர் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றுமல்லாமல் பொதுமக்கள் இடையிலும் பிரபலமாக திகழ்கிறார். கிரிக்கெட்டின் மற்ற அங்கங்களை விட பிரபலமானது ஐபிஎல் டி20. பள்ளியின் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த வகையான கிரிக்கெட் அனைவரையும் ஈர்த்துள்ளது.
மக்களிடையே வரவேற்கப்பட்ட இந்த விளையாட்டு தனித்துவமான விளம்பரப் பாடலை கொண்டு கிரிக்கெட் வீரர்களையும் விளம்பரப்படுத்தி உள்ளது. ஐபிஎல் டி20 வெவ்வேறு அணிகளில் இருந்து 2018 முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் ஹர்பஜன்சிங் தமிழர்கள் இடையே பிரபலமானார்.
சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் வந்தபொழுது ஊடகங்களில் தமிழில் பேசி கலக்கினார். சமீபத்தில் பிரச்சனைக்கும் தன் குரலை எழுப்பி ஆதரவு தெரிவித்தார். அவ்வாறு தமிழகத்துடன் இணைப்பில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
லோஸ்லியா
லோஸ்லியா இலங்கையில் இருந்து வந்த ஒரு மாடல் பின்பு தொலைக்காட்சி தொகுப்பாளராக பணி புரியலானார். இலங்கையில் கிலினோச்சியில் பிறந்த இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.

பிக்பாஸில் வந்தபிறகு லொஸ்லியா விற்கு இரண்டு படவாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்றான பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் பஜ்ஜியின் பர்த்டே ஆணை இன்று வெளியானது.
பிரண்ட்ஷிப் என்று சொன்னவுடன் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அதே போல் வண்ணம் நிறைந்துள்ளது இந்த போஸ்டர். போஸ்டரை என்ஜாய் பண்ணிட்டு அப்படியே பஜ்ஜிக்கு ஒரு விஷ் போட்டுருங்க மக்களே!