பறவைக்காய்ச்சல் பரவல் காரணமாக இறைச்சிக்கு தடை
கோழிகள் உள்ளிட்ட பறவையின் இறைச்சியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த நேபாளம் தற்போது தடை செய்துள்ளது. கேரள மாநிலத்தில் வாத்துகள் வளர்க்கப்படும் பண்ணையில் பறவைக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டன.
சில மாநிலங்களில் மத்திய பிரதேசம் உட்பட காக்கைகள் திடீரென்று இறந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து அவற்றை பரிசோதித்த பிறகு காக்கைக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரிய வந்தன.
பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டதால் மத்திய அரசும் பறவைக்காய்ச்சல்-ன் பாதுகாப்பை தீவிரப்படுத்த இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
6 மாநிலங்களில் குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ளன என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் நேபாள அரசு இடைக்கால தடையாக இந்தியாவிலிருந்து கோழி போன்ற பறவைகளை இறைச்சிக்காக இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளன.