கல்விபோட்டித்தேர்வுகள்

மத்திய அரசின் எஸ்எஸ்சி சிஜிஎல் வேலைவாய்ப்பு

மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுப் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (SSC CGL) நடத்தும் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிவாய்ப்பு பெறுவார்கள். ஆண்டுதோறும் மத்திய அரசின் எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் சுமார் 7500 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ்.எஸ்.சி சிஜிஎல் நடத்தும் போட்டி தேர்வில் நியமிக்கப்பட உள்ள பணியிடங்களான தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகம் போன்ற பணியிடங்களுக்கு உதவி பிரிவு அலுவலர் தேவைப்படுகின்றனர்.

மேலும் மத்திய அரசின் வருவாய் துறைகளான மத்திய அரசின் மற்ற பணியிடங்களுக்கும் நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும் டிஎன்பிஎஸ்சி ,வங்கி போட்டி தேர்வுக்கு நாம் எவ்வாறு தயார் ஆகின்றோமோ அதேபோல இத்தேர்வுக்கு நாம் தயாராக வேண்டும். இப்ப பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு பாடப்பகுதியில் பட்டப் படிப்பு பெற்ற இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : திருக்குறளுடன் மொழிப் பாடக் குறிப்புகளை படிங்க குரூப் 2 தேர்வை வெல்லுங்க!

மத்திய அரசின் எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு தேர்வானது முதல் நிலை ஒன்று மற்றும் டயர் டூ எனப்படும் முறைகளில் நடைபெறுகின்றது இதில் தேர்ச்சி பெறுவோர் ரீசனிங் மற்றும் ஜென்ரல் அவேர்னஸ் காம்ப்ரிகென்ஷன் போன்ற பிரிவுகளில் விடை கொடுக்க வேண்டும் கணிதம் ரீசனிங் ஜெனரல் அவேர்னஸ் கம்ப்யூட்டர் நாலேஜ் ஜெனரல் ஸ்டடிஸ் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் அமையும் மாணவர்கள் திறம்பட தேர்வினை எழுதி வெற்றி வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்

அதிகாரப்பூர்வ தளமான எஸ்எஸ்சி தளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். மே மாதம் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் மற்ற பணியிடங்களான குரூப் பி குரூப் சி போன்ற பணியிடங்களும் இந்த தேர்வின் மூலமாக நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 7500 பணியிடங்கள் இருப்பதால் தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோருக்கு இது ஒரு வாய்ப்பாகும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஓட்டு தேர்வினை வென்று உங்களுக்கான கனவினை நிஜமாக்குங்கள்

மேலும் படிக்க : போட்டி தேர்வுக்கான கேள்வி படிங்க தேர்வர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *