கல்விபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கின்றது. மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் போர்டு அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்எஸ்சி 2020ஆம் ஆண்டு ஜூனியர் இன்ஜினியரிங் பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  • மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எஸ்எஸ்சியில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
  • எஸ்எஸ்சியில் கணினி மற்றும் உடல்த் தகுதி தேர்வு மூலம் தேர்ச்சி பெறுவோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

எஸ்எஸ்சியில் ஜூனியர் இன்ஜினியர் பிரிவு 2020ஆம் ஆண்டு காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி

மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பெற கல்வித் தகுதியாக என்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

வயது

விண்ணப்பதாரர்கள் 30 வயது நிறைந்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வேலைவாய்ப்பில் வயதுவரம்பில் சலுகைகள் அறிவிப்பின்படி கிடைக்கப் பெறலாம்.

தேர்வு

எஸ்எஸ்சி வேலைவாய்ப்பு பெறலாம் கணினி தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு மூலமாக தேர்வு மூலமாக தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பளம்

எஸ்எஸ்சி பணி வாய்ப்பு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்எஸ்சியில் பணிவாய்ப்பு பெறுபவர்கள் மாத சம்பளம் ரூபாய் 35, 400 முதல் 1,1,2400 வரைப் பெறலாம். எஸ்எஸ்சியில் பணிவாய்ப்பு பெறுவோர்க்கு இந்தியா முழுவதும் பணி யிடம் இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்

மத்திய தேர்வாணையத்தின் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் எக்ஸ் சர்வீஸ் மேன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள போன்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், மூலமாகவோ அல்லது மாஸ்டர் கார்டு டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலமாக மற்றும் எஸ்பிஐ செலான் மூலமாகவோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தின் விண்ணப்ப அறிவிக்கை இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_01102020.pdf .

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பபுடன் விண்ணப்பிக்க லிங்கினை https://ssc.nic.in/ இங்குக் கொடுத்துள்ளோம் .

தேர்வர்கள் அதனைக் கிளிக் செய்து முழுமையாகப் படித்து விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

விண்ணப்ப தேதி

ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 30, 2020 ஆகும்.

எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 5, 2020 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *