சினிமா பாடல்கள்

அண்ணாத்த படம் பாடல் வரி மருதாணி சிவப்பு சிவப்பு…

அண்ணாத்த (Annaatthe) (2021) என்பது ரஜினியின் 168 ஆவது தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாடல் வரிகள்

பெண் : மானா மதுரையில…
மாமன் குதிரையில…
மாலை கொண்டுவாரான்…

பெண் : மீனா மினுங்கையில…
மின்னி சிணுங்கயில…
மேளங்கொட்டப்போறான்…

ஆண் : ஹேய்… மலந்து மலந்து அனிச்சங்கொழுந்து…
மணமணக்குதடி…
மாப்புள மாப்புள தோளோட ஆட…

ஆண் : வளந்து வளந்து அழக சொமந்து…
மினு மினுக்குதடி…
வெத்தல வெத்தல பாக்கோட கூட…

பெண் : அஞ்சன அஞ்சனமே விழி பூச…
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வளையோசை…

ஆண் : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

மேலும் படிக்க : ஹே உமையாள் தமிழ் பாடல் வரிகள்

BGM

குழு (ஆண் & பெண்கள்) : பொம்மி நடந்துவாரா…
கும்மி அடிங்க ஜோரா…
தாலி சூடப் போறா…

குழு (ஆண் & பெண்கள்) : அம்மி மிதிக்கப்போறா…
அன்ப விதைக்கப்போறா…
தாயி வீட்டுச் சீரா…

ஆண் : ஹேய்… தவுல அடிக்க நாயனம் ஒலிக்க…
நேரம் நெருங்குதடி…
அட்சத அட்சத உன்மேல தூவ…

ஆண் : வெரல புடிக்க விரதம் முடிக்க…
வாரந்தெரிஞ்சிக்கடி…
அங்கன இங்கன நீத்துள்ளி தாவ…

பெண் : அக்கறஅக்கறையா இருப்பான்டி…
சக்கர சக்கரையா இனிப்பான்டி…

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

ஆண் : மண்ணுதான் விதை ஒன்னுதான்…
அது நூறா மாத்தி நீட்டுமே…
நின்னுதான் எங்க பொண்ணுதான்…
மறு வீட்டை ஏத்தி காட்டுமே…

குழு (ஆண்கள்) : நெட்டையில்ல குட்டையில்ல…
ரெண்டு கரையும் நேராக…
கொட்டும் மழை கொட்டையில…
தாங்கி பிடிக்கும் ஆறாக…

ஆண் : யாரு பெருசுன்னு எண்ணாத விட்டுத்தள்ளு…
வண்ணம் இணைஞ்சு நின்னாதான் வானவில்லு…

ஆண் : ஆணும் பொண்ணும் ஒன்னுக்கொன்னு…
சேர்ந்து வாழ வேணும் கண்ணு…
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு…

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

மேலும் படிக்க : சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *