தமிழனின் பெருமை கன்னடத்தில் கற்பித்த ஞானம்!
தமிழ்தான் என் மூச்சு, தமிழ்தான் என் பேச்சு, தமிழ்தான் என் வாட்சை நான் சங்கத்தமிழன், தங்கத்தமிழன், தமிழ் தாயின் குடிமகன் என தமிழ் தமிழன் அரசியல் பேசி நாட்டை நடுவீதியில் நடத்தும் பல நரி வேஷம் போடும் பெரியவர்கள் மத்தியில், ஒரு நல்ல அதிகாரியிடம் பாடம் கற்கும் வாய்ப்பு கிட்டியது.
கன்னட மொழியில் தமிழரின் திருவள்ளுவர் மற்றும் நமது சிறப்புமிகு முதலமைச்சராக இருந்த காமராசர் அவரின் அரசாளும் தரமம், அவர்கள் திருவள்ளுவரின் திருக்குறள் அதில் சொல்லப்பட்டுள்ள இல் அறத்துப்பால் பொருட்பால் குறித்த முன்னாள் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி கருர் சேர்ந்த அண்ணாமலை அவர்கள் பள்ளி ஒன்றில் சிறப்பு அதிகாரியாக கலந்துகொண்டு கன்னடத்தில் வாழ்வியல் கற்றுத்தந்தார்.
அழகு தளராத மொழி உச்சரிப்பு செய்து தமிழை தலைக்கு மேல் வைத்து கொண்டாடி கன்னடத்திற்கு மகுடம் சூட்டினார். என்ன ஒரு அற்புதம் இதைவிட ஒரு தமிழன் தன் மொழியையும் அதிலுள்ள மாந்தர் தம் அறிவையும் பாராட்டுப் பெருமை பேச முடியாது. இதுவே கற்றோருக்கு சிறப்பு சிறுபிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று எண்ணாமல் அங்கு வந்திருந்த பெற்றோர்களுக்கும் சேர்த்து அவர் நடத்திய பாடம் மொழி அறியாதவர்கள் எல்லாம் தமிழ் மீது ஒரு காதல் வந்திருக்கும் அவ்வளவு தனித்துவத்துடன் இருந்தது.
தமிழ் பெருமையை கன்னட மொழியில் ஏற்கும் விதத்தில் அழகு பிறழாமல் அறிவுடன் பேசினார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஊரடங்கு காலம் ஊடகத்தில் பல வித மாயம், ஏதேதோ பேச்சுக்கள் என்னென்னவோ இருக்கின்றன. ஆனால் இது போன்ற அறிவு மிகுந்த படைப்புக்கள் நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த தமிழனை எண்ணி நாம் கர்வம் கொள்ள வேண்டும் தலைநிமிர்ந்து நின்று தமிழ் தாய்க்கு நன்றி கூறி மற்ற மொழிகளுக்கும் மரியாதை செலுத்தி தமிழன் என்பவன் அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செல்பவன் என்பதை இந்த மாபெரும் ஞானம் கொண்ட அண்ணாமலை ஆபீஸர் புரியவைத்தார்.
அறிவிற்கு அப்பாற்பட்ட ஞானம் இந்த ஞானத்தை கற்றலில் ஒரு பெருமிதம் அதை அப்படியே உங்களுடன் சேர்ப்பதில் மற்றும் ஒரு பெருமிதம் இதுதான் உண்மையிலே தமிழ் வளர்ப்பு என்று கூறலாம். பொழுது போகவில்லை என்று எதை எதையோ புரட்டுகிறோம். இது போன்ற ஞான பாடங்களையும் வலைதளத்தில் தேடிக் கற்றுக்கொள்வோம் வாழ்வை வளமாக்குவோம்.