ஆலயத்துக்கு உள்ளேயே நடைபெறவிருக்கும் ஆனித்திருமஞ்சன வைபவம்!
சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது அங்கு இருக்கும் சிற்பங்கள் மற்றும் உற்சவங்கள் ஊரறிந்த ரகசியம்.
நடராஜ மூர்த்தியின் 108 முத்திரைகளும் 4 கோபுரங்களில் வடிக்கப்பட்டிருக்கிறது அதுதவிர வருடத்தில் இருமுறை நடராஜர் கோவில் தேர் தரிசனம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படும் அதில் மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன உற்சவங்கள் மிக மிக பிரபலம்.
அதேபோல ஆனி மாதமும் ஆனித்திருமஞ்சன வைபவம் நடைபெறும் .
கொடி ஏற்றப்பட்டு அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்தி புறப்பாடு செய்து எட்டாவது நாள் உற்சவத்தில் மகா ரத உற்சவம் எனப்படும் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் அந்த தேர் திருவிழாவில் என்ன விசேஷம் என்றால் நாம் எந்த நடராஜமூர்த்தியை ஆலயத்திற்கு சென்று வணங்குகிறோமோ அதே நடராஜமூர்த்தி வீதியில் நம்மைக்கான பவனி வருவார்.
அதன் பின்னர் தேரிலிருந்து அன்னை சிவகாமசுந்தரி மற்றும் நடராஜ மூர்த்தியை ஊர்வலமாக கொண்டு வந்து ஆயிரம்கால் மண்டபத்தில் வைத்து லட்சார்ச்சனை செய்வார்கள்.
பிறகு அடுத்த நாள் காலை அபிஷேகம் நடைபெறும் மார்கழி மாதம் என்றால் ஆருத்ரா அபிஷேகம் , ஆனி மாதம் என்றால் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும் .
அப்படி அபிஷேகம் செய்யப்படும்போது பால், தேன் சந்தனம் , என்று விதவிதமான கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சென்ற மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கண்டுகளித்த செய்தித்தாள்களில் செய்திகள் வந்தது ஆனால் இந்த ஆணி மாதமோ உலகம் முழுவதும் இந்த கொரொனா நோய்த்தொற்று பரவலால் எந்த ஆலயங்களும் திறக்கப்படவில்லை.
ஆலயங்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இந்த முறை ஆணி திருமஞ்சனம் ஆலய வளாகத்திற்குள்ளேயே கோலாகலமாக நடத்துவது என்று தில்லை வாழ் அந்தணர்கள் ஆன “பொது தீட்சிதர்கள்” முடிவு செய்துவிட்டார்கள்.
அதன்படி வருகின்ற 19ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று அதன்பின்னர் நித்தமும் பஞ்சமூர்த்திகள் என்பவனை ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெறப் போகிறது.
தேர் உற்சவம் இந்த முறை நடக்க முடியாது என்பதால், தேரில் ஏறும் சுவாமி பவனி ஃபுல் பழங்காலத்திலேயே நடைபெற்று சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ சுவாமி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் மறுநாள் அனேகமாக 26 ஆம் தேதி அங்கிருந்து ஆணி திருமஞ்சன தரிசனம் கொடுத்து அவரின் இருப்பிடத்திற்கு ஆன அவரின் இருப்பிடமான பொன்னம்பலத்திற்கு மீண்டும் சென்று விடப் போகிறார்.
சுவாமி தூக்கும் பக்தர்கள் மற்றும் பூஜாரிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்பத்தாருக்கு கூட யாருக்குமே அனுமதி இல்லையாம்.
நாம் மன கண்களாலே இந்த முறை ஆனந்த நடராஜரின் ஆனி திருமஞ்சனம் தரிசனத்தை கண்டு கொள்ள வேண்டியது தான் எல்லாம் அவரின் செயல்.
அவர் மனது வைத்தால் அவர் அருளாலேயே சிதம்பரம் சென்று வருகின்ற மார்கழி ஆருத்ரா தரிசனத்தை கண்டு களிக்கலாம்.
ஆனந்த நடராஜ அருள்புரிய வேண்டும் அப்பா !!
அன்னை சிவகாமசுந்தரி தாயே செவிமடுக்க வேண்டும் அம்மா!!
ஆடல்வல்லானின் ஆனித்திருமஞ்சன தரிசனம் இந்த முறை ஆலயத்துக்கு உள்ளேயே நடைபெற இருக்கிறது என்பது, மிகப் பெரிய வருத்தமாக இருந்தாலும், உற்சவம் தடைபெறாமல் நடைபெறுகிறது என்று, பக்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.