சினிமாசின்னத்திரைதமிழகம்யூடியூபெர்ஸ்

Priyanka Biography: அனைவரின் சிரிப்பிற்கு சொந்தக்காரி பிரியங்கா தேஸ்பாண்டே

பிரியங்கா என்றாலே ஆர்ப்பாட்டமும் சந்தோஷமும் ஆஹா என்ற ஆட்டம் பாட்டமோ நிறைந்து, புன்னகையையும் குளுகுளு தன்மையையும் தன்னூல் கொண்டவளாக இந்த பிரியங்கா இருக்கின்றார்.

பிரியங்கா விஜய் டிவி ஆங்கர் ஆகவும் தனக்கு என்று தனி யூ டியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கின்றார். இரண்டிலும் புன்சிரிப்பு, சேட்டைகள் பல செய்து அனைவரையும் கவர்ந்து முக்கிய பங்காற்றுகிறார். இடையில் அவளும் நானும் என்ற அர்ச்சனாவின் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது எண்ணங்கள் மற்றும் தான் கடந்து வந்த பாதைகளை மிகவும் நேர்மறையாக வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் பாராட்டினை பெற்றுள்ளார்.

குழந்தை குணம் கொண்ட சுட்டி பிரியங்கா


பிரியங்கா மீடியா உலகில் 15 வருட அனுபவத்துடன் ஒரு ஜாம்பவானாக வளர்ந்து இருந்தாலும் பணிவு குறைவாத பேச்சு, காமெடி குறையாத சேட்டைகள், ஆஹா என்ற ஆசையோடு பார்க்க வைக்கும் அவரது வெள்ளந்தி முகம் ,வெறுக்க வைக்காத சேட்டைகள், பேச்சுக்கள் சாப்பிடும் அழகு என்று அனைவரையும் இன்றளவும் தனது பக்கத்தில் வைத்திருப்பதில் பிரியங்காவிற்கும் நிகர் பிரியங்கா தான்.

இகாவுடன் பிரியங்காவின் சேட்டை

தனது தம்பி மகள் இகாவுடன் அவர் ஆடும் ஆட்டங்கள் பாட்டங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தம்பி மகளுக்கு கொடுக்கும் பரிசுகள் தம்பி மகளும் இவருக்கு இணையாக இணைந்து விளையாடும் இந்த காட்சிகள் அனைத்தும் நமது கண்களுக்கு விருந்தாக நல்ல பொழுதுபோக்காக பாசிட்டிவ் எனர்ஜியை தருகின்றது என்று சொல்லலாம்.


தற்போது பிரியங்கா தனது உடல் எடையை குறைக்க புதிதாக வெயிட் லாஸ் பயணத்தை தொடங்கி இருக்கின்றார். ஏப்ரல் மாதத்திற்குள் 5 கிலோ குறைப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றார். அவரது செல்ல பேச்சுக்கள் யாரையும் சிரிக்க வைக்கும் குறும்புத்தனத்துடன் மேகி ஆசைகள் என்று தனது விலாக்கில் பதிவு செய்து குறும்புத்தனத்துடன் செல்ல தனமாக நடந்து கொள்கின்றார்.

குறும்புத்தனத்தால் அனைவரின் மனம் கவர்ந்த பிரியங்கா


அவரை குறை சொல்ல யாருக்கும் முடியாது. அதையும் மீறி குறை சொல்கிறேன் பேர்வழி என்று பேசினால் நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து துப்பிக்கொள்ள தான் வேண்டும். ஏனென்றால் பிரியங்கா உன்னதமான மனம் படைத்த ஆத்மா என்று சொல்லலாம். இந்த அவசர உலகில் வாரத்தில் ஆறு நாட்களும் படாத பாடுபட்டு அமைதியாக ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்த்து என்ஜாய் செய்யலாம் என்றால் அதற்கு சற்றும் தாமதிக்காமல் பிரியங்காவின் சேட்டைகள், லொள்ளு பேச்சுக்கள், காமெடி குறும்புகள், அவர் சாப்பிடும் அழகு சாப்பாட்டில் அவர் காட்டும் முக்கியத்துவம் ,அதனால் அவர் படும் அவமானம், அனைத்தையும் டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளும் பண்பு இவை அனைத்தையும் பார்க்கும் போது பிரியங்கா ஒரு வரம் என்றே சொல்லலாம் .

அனைவரின் பொழுபோக்கிற்க்கு சொந்தக்காரி பிரியங்கா

பொழுது போக்கும் ரசிகர்களுக்கு பிரியங்கா இருந்தால் அந்த வார இறுதி நாள் சற்று ஜாலியாகத்தான் போகும். ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அவர்கள் முகத்தைப் பார்த்து அவரது பேச்சை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அது வீக் எண்ட் ட்ரீட் ஆக தான் இருக்கும் அப்படிப்பட்ட பிரியங்காவுக்கு நன்றி சொல்லி நாம் பெருமிதம் கொள்வோம். நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளராக பிரியங்கா இருக்கின்றார்

அவருடன் மாகாபாவும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் சொல்லி தீராது. இது பிரியங்கா செக்ஸன் என்பதால் அவருக்கான இடமாக இருக்கின்றது. தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளில் முட்களும் இருக்கலாம்.

ரோஜாக்களும் இருக்கலாம் ஆனால் இவை இரண்டையும் சமமாக எடுத்துச் செல்லும் பக்குவம் பிரியங்காவிடம் இருக்கின்றது. அதை நாம் அவரது பேட்டிகளில் பார்க்கலாம். இப்பவும் கூட பிரியங்கா வெளியிட்ட விலாக்கில் நாம் குழந்தைத்தனமாக கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்தையும் பார்க்க முடிகின்றது வெள்ளந்தி சிரிப்பும், வெடிக்கும் சிரிப்பும், பேச்சும் அம்மா மற்றும் இகாவுடன் அவர் ஆடும் ஆட்டம் அழகுக்கு அழகு. பார்த்து ரசித்து விட்டு தான் பதிந்துள்ளோம் அடுத்த அவரது ஆட்டத்தை காண காத்திருக்கும் ரசிகர் கூட்டங்களில் ஒன்றாக சிலேட்டு குச்சியும் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *