செய்திகள்தேசியம்

டுவிட்டரில் டிரெண்டாகும் Amazon_Insults_National_Flag …

குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வரும் நிலையில் அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடியை அவமதித்து விட்டதாக நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு குடியரசு தினத்தை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைனில் கொடிகட்டு பறக்கும் அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடையை அவமத்தித்து விட்டதாக கூறி டுவிட்டரில் Amazon_Insults_National_Flag என்ற ஹெஷ்டேக்குடன் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு நபர் இது அமேசான் நிறுவன த்திற்கு முதல் முறை இல்லை என்றும், அமேசான் எப்போது இந்தியர்களின் உணர்வுகளுடன் தொடர்ந்து விளையாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமேசான் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய கொடி சட்டம், 2002 -ம் படி = “கொடியானது எந்த ஒரு உடையாகவோ அல்லது சீருடையாகவோ பயன்படுத்தப்படக்கூடாது. இது மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள் அல்லது பெட்டிகளில் எம்ப்ராய்டரி அல்லது அச்சிடப்படக்கூடாது. என கூறப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் நிறுவனம் அதனை மீறியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *