மருத்துவம்

நெய்யுண்டு நோயின்றி நலமுடன் வாழ்வோம்!..

நெய் சாப்பிடுங்க  எப்பொழுதும் பாஸிட்டாவா இருப்பிங்க. நெய் நோய்களின் தாக்கத்தை தடுக்கும் சக்தி கொண்டது, அசதிகள் குறைக்கும். தினமும் நெய்யை சாப்பிட்டால் கொழுப்பு நிறைந்த உணவு என அதிகம் சேர்ப்பதில்லை ஆனால் தினமு நெய் சாப்பிட்டால் உடல் வலுபெறும் என்பது உண்மையாகும்.

ஆயிர்வேதத்தில் நெய் மருத்துவ  குணமாக கருதப்படுகின்றது. உடலுக்கு ஆரோக்கியமாக ஆற்றலை  கொடுக்கின்றது உணவை  ஜீரணிக்க நெய் மிகப் பெரும் மருந்தாக இருக்கின்றது. 

ஆயுர்வேதத்தில் நெய்

நெய் உணவாக உண்டபின் அது கொழுப்பாக  உடலில் தங்காமல் ஆற்றலாக உடலுக்கு வலுவூட்டுகின்றது. இது பலருக்கு தெரிவதில்லை. 
ஆயுர்வேதத்தில் நெய்  கலந்த பொருட்கள் பல பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் நெய் சீக்கிரம் கெடுவதில்லை என்பது காரணமாகும். மேலும் கண்களின் குறைப்பாடுகளான மாலைக்கண், கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஆகிய  குறைவுகளிலிருந்து கண்களை காத்து நிற்கின்றது. 

நெய் நிறைய நேர்மறையான குனங்கள் கொண்டது அதனால் அதனை தீபமாக நாம் ஏற்றுகின்றோம், உணவாகவும் மருந்தாகவும் அதனை உடலுக்கு கொடுக்கின்றோம். நெய்யினை ரசாயணம் என ஆயுவேத உலகில் அழைக்கப்படுகின்றது. மருந்துகளை கெடாமல் காக்கின்றது. மேலும் வாதம், பித்தம், கபம் சமம்மாக்கின்றது.

ஆரோக்கியத்துடன் சிறந்து வாழ

நெய் மருந்துகளின் குணங்களை  கொண்டு செல்களின் சுவர்களில் ஊடுருவுகின்றது.  இது மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் ஏற்படுகின்ற அலைச்சலில் ஏற்படுகின்ற சோர்வை தடுக்கின்றது. 
ஆகவே இனிமேல் நெய்யை நன்றாக உண்டு வரவும் எனக்கும் இதில் அனுபவம் உண்டு நான் சிறுவயது முதல் கண்ணனைப் போல் நெய்மீது ஆசை கொண்டவள் 15 வருடமாக நெய் கலந்த உணவு தினமும் உண்டு வந்தவள. பிறகு 7 வருடம் வீட்டை விட்டு வெளியே தங்கிப் படித்தேன். அப்பொழுது நெய்  நான் எடுத்துக் கொள்ளவில்லை.

இருப்பினும் என் வயது ஒத்த  தோழிகள் தொடர்ந்து 20  நிமிடம் நடந்தால் கைவழி, கால்வழி என்பார்கள் ஆனால் எனக்கு அப்படித் தென்ப்பட்டதில்லை. மேலும் 7 வருட  காலம் நான் வீட்டில் இருந்து தங்கிப் படித்தப் பொழுதும் என்னால் எந்த  உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் தாங்க முடிந்தது.  இதற்கெல்லாம் காரணம் நான் சிறுவயது முதல் உண்டுவந்த நெய்யே காரணம்.

இப்பொழுதும் நான் கண்ணனைப் போல்தான்  வெண்ணெய் நெய்யில் விருப்பமுடந்தான் உள்ளேன். 
நாம் உண்ணும் உணவில் எல்லாம் நிறைவே ஆனால் நம்மை  திசைத்திருப்ப வணிக நோக்கத்துடன் செயல்படுவோர்க்காக நாம் செவிசாய்க்க வேண்டியதில்லை.  ஆரோக்கியத்துடன் சிறந்து வாழ உணவுகளில் நெய் கலந்து உண்ணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *