விரைவு ரயில்கள் வரும் 12.08.20 வரை ரத்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.
கொரோன வைரஸ் பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வரும் 12.08.20 புதன்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலங்களில் முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்து முழு தொகையையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோன காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் இயங்கிவந்த 3,500 முன் பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லாத ரயில்கள், 5000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்துள்ளது.
அதே நேரம் புலம் பெயர்ந்து தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இயக்கத்தில் மாற்றம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனவைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தாலும், இதுவரை இந்தியாவில் கொரோன வைரஸ் இலட்சத்தி 73,015 பேர் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
உயிரிழப்பு 16,794 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ,71,697 ஆக உள்ளது. டெல்லியின் கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், ஆகஸ்ட் மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது.
எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறநகர் ரயில்கள் சேவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ரத்து செய்து ரயில்வே துறை அறிவித்துள்ளது. நகரங்களை இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 2 வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது.