ஏழுமலையானை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்து நாட்களுக்கு டிசம்பர் 25 தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தைகளையும் அனுமதிக்க வேண்டுமென கோவில் நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
- கொரோனா விதிகள் காரணமாக குழந்தைகள்,முதியவர்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.
- அனைத்து வயதினரையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி.
- முதியவர்கள் தங்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும்
இதைத்தொடர்ந்து அனைத்து வயதினரையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம் என்ற அனுமதி வழங்கியுள்ளது.
முதியவர்கள் தங்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், நவராத்திரி விழா போன்றவை கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரோனா விதிகள் காரணமாக பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது வயது வரம்பின்றி அனைவரும் தரிசிக்கலாம் என அனுமதி வழங்கினர்.