சினிமா

சத்தமின்றிஅதிரடி வசூலில் சாதித்த பிளாஸ்ட் திரைப்படம்

ஆக்சன் கிங் அர்ஜுன் அன்று போல் இன்றும் அதிரடி குறையாமல் சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வுடன் இருக்க ஒரு அதிரடி திரைப்படத்தை கொடுத்துள்ளார். குடும்பத்துடன் பார்க்க ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் அபிராமி அவர்கள் நடிப்பில் அழகாக அனைவருக்கும் பிடித்தமானதாக பிளாஸ்ட் திரைப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கதைக்கு அறிமுகமான இளைஞர் இயக்குனர்

பிளாஸ்ட் திரைப்படம் அறிமுக இயக்குனர் சுபாஷ்.கே.ராஜ் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான மிகத் தரமான படமாக இருந்தது. இது இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பது அவசியமானதை விளக்கும்.

பிளாஸ்ட் படத்தின் நாயகர்கள்

பிளாஸ்ட் கதை கம்பீரமாக மகளிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்ற குடும்ப வளர்ப்பில் உருவான கதை மிகவும் நேர்த்தியாக நகர்ந்தது.

இப்படத்தில் அர்ஜுன் மற்றும் அபிராமி ப்ரீத்தி முகுந்தன், விவேக், பிரசன்னா, ஜான் கொகேன், பவன், திலீபன் உள்ளிட்டோர் நடத்திருக்கின்றனர்.

பெண்கள் சுயபாதுகாப்பு மற்றும் சமுதாய நலன் முக்கியத்துவம் பெரும் பிளாஸ்ட்

நீண்ட காலமாக மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வந்த அர்ஜுன் அவர்கள் இந்த முறை மிகவும் நேர்த்தியாக தனது அதிரடி பாணியை கராத்தே மூலமாக காமித்திருப்பார். அவரது மனைவியாக நடித்த அபிராமி நீண்ட நாட்களுக்கு பின்பு ஸ்ட்ராங்கான கேரக்டரில் மெனக்கடலுடன் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றார். குடும்ப கதையாக சமூக பொறுப்புடன் பெற்றோர் வளர்ப்பு இருக்க அதன் காரணமாகவே மிகுந்த சவால்களை சாதனையாக்கும் ஒரு கதையாக அமைந்தது. இல்லறத்தில் ஒற்றுமை மற்றும் நன்னெறி அத்துடன் அவர்களின் ஆதரவு இருக்கும் பெண் பிள்ளை எவ்வாறு சமூகத்திற்கு தன்னால் இயன்றதை செய்கின்றார் என்பதை அழகாக திரைக்கதை வெளிப்படுத்தி இருக்கும்.

குறைந்த பட்ஜெட்டில் பிளாஸ்ட் திரைப்படம்

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. 18 கோடியில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம் சுமார் 76 கோடிக்கு மேல் லாபம் பெற்று தந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து போஸ்டர் அறிவித்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் காலங்கள் மாறினாலும் தரமான மதிப்புள்ள படங்களுக்கும் என்றும் ஆதரவு தருவதை தவிர்ப்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. தியேட்டரில் சாதித்த பிளாஸ்ட் திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி நெட்பிளிக்ஸ தளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *