கைதுக்கு பின் பேசிய குஷ்பு
பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசித் தாக்கியதை அடுத்து திருமாவளவனுக்கு எதிராகக் குஷ்பு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும் பாஜகாவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களுக்கு மரியாதை
குஷ்பூ சென்னையில் கைது செய்யப்பட்ட பின்பு மாலையில் வீடு திரும்பினார். அப்போது குஷ்பு பேசியதாவது ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பெண்களை மதித்து நடக்க வேண்டும் பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் பெண்களை மதிப்பதை வீட்டிலிருந்த பின்பற்றப்பட வேண்டும் எனவும் பேசி இருக்கின்றார்.
தேர்தல் வந்தால் இப்படித்தான்
திருமாவளவன் பெண்களைத் தவறாகப் பேசியது தவறு என்றும் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் குஷ்பூ இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். தேர்தல் வந்துவிட்டது பாஜக்காவை குறை கூற முடியாது என்பதால் இது போன்ற கலவரங்களைச் செய்கின்றனர் என்று குஷ்பு தெரிவித்திருக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான பேச்சுக்கள்
கட்சிகள் அரசியல் கொள்கைகளுக்கு பெண்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி மரியாதையை கெடுத்து வருகின்றனர். பெண்களைப் பற்றிப் பேசி பெரும் புகழ் அடையும் தலைவர்கள் பலர் இருக்கின்றனர்.
சட்டங்கள் சாதகமாக இருக்க வேண்டும்
பெண்களைப் பற்றி இழிவாகப் பேசி எதிர்மறை கவனத்தை பெரும் தலைவர்களும் இந்த நாட்டில் அதிகம் பேர் இருக்கின்றனர். எத்தனையோ சட்டங்கள் பொதுமக்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.
தடுப்புச் சட்டம்
பெண்களுக்கென்று எதிராகத் தனிப்பட்ட முறையில் அவர்களைப் பழித்துப் பேசுவது, இழிவுபடுத்துவது, நடத்தைகுறித்துப் பெண்களுக்கு எதிராகப் பேசுவது குறித்து தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
நடத்தை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று ஆனால் அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு மட்டும் இது போன்ற இழிவு பேச்சுக்கள் பரிசாகக் கிடைக்கின்றன. இதுகுறித்து அரசு தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
ஜனநாயக நாடு
இது ஜனநாயக நாடு ஆண் பெண்களுக்குச் சமமான உரிமை கொடுக்கப்பட வேண்டும். சரிதான் ஆனால் பெண்கள் எதிரானப் பேச்சுக்கள், அவர்களை அவமான படுத்தபடும் பெண்களுக்கு எதிராக நடக்கும் நிலைக்கு அரசு தடுக்க வேண்டும். பெண்களுக்கென்று உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.