இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி காரணம் இதுதான்
ஜனத்தொகை அதிகம் கொண்ட சீனா அரிசியை இறக்குமதி செய்கின்றன. 4 மில்லியன் டன் அரிசியை சீனா வருடத்திற்கு இறக்குமதி செய்கின்றது. இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை விரும்பாத சீனா அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.
- இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வந்தன.
- மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உள்ளது.
- இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.
எல்லைப் பிரச்சினை
இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வந்தன. இந்த மாற்றத்தை தன்னுடைய நிலைப்பாட்டில் தற்போது கொண்டு வந்துள்ளன. இந்தியாவின் குறைந்த விலை மற்றும் தேவை அதிகம் என்பதால் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு இறக்குமதி
வருகின்ற மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உள்ளது சீனா. 22 ஆயிரம் விலையுள்ள ஒரு டன் அரிசி என்ற விலையில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக இறக்குமதி செய்யும் சீனா
பாகிஸ்தான், மியான்மர், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் வழக்கமாக இறக்குமதி செய்யும் சீனா. ஒரு டன்னுக்கு 30 டாலர்கள் வரை விலைகுறைவாக அதாவது, 2,200 ரூபாய் இந்தியா சீனாவிற்கு குறைவாக கொடுப்பதாக கூறப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும்
30 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் சீனா இந்தியாவிடம் அரிசியை இறக்குமதி செய்ய நாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி செய்யக்கூடிய அரிசியின் தரத்தை பொருத்து எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும் அரிசியின் அளவு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.