உங்கள் வீட்டுத் தோட்டத்தின் அழகை கூட்டணுமா?
தோட்டத்தை அழகு படுத்தும் போது தொடர்ச்சியை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்தின் அழகை கூட்டும். தோட்டத்தை அழகு படுத்தும் போது தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ஒத்துப் போகக்கூடிய செடிகளை இருக்குமாறு நடுவது நல்லது.
- தோட்டத்தை அழகு படுத்தும் போது தொடர்ச்சியை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- மாறுபட்ட செடிகள் மற்றும் வண்ண செடிகள் அமைக்கப்பட்ட தோட்டமே அழகை கூட்டும் என்பது ரகசியம்.
- வேறுவேறு வண்ண இலைகளைக் கொண்ட செடிகளையும், பூச்செடிகளுக்கு பதில் வளர்க்கலாம்.
தோட்டம் கண்ணுக்கு விருந்தாக
பூக்கள் மற்றும் செடிகள் ஒன்றுக் கொன்று மாறுபட்ட வகைகளிலும் ஒத்துப் போகக்கூடிய வகைகளிலும் கலந்து பார்ப்போரை ஈர்க்கும் வகையில் நட வேண்டும். அப்போதுதான் தோட்டத்தின் அழகு கண்ணுக்கு விருந்தாக இருக்கும். மாறுபட்ட செடிகள் மற்றும் ஒத்துப் போகக்கூடிய வண்ண செடிகள் அருகில் அமைக்கப்பட்ட தோட்டமே அழகை கூட்டும் என்பது ரகசியம்.
மாறுபட்டு இருப்பதால் இவை எளிதில் பார்வையில் இருக்கக் கூடியவை. கொலியஸ், குரோட்டன் போன்ற பலவகை இலைகளைக் கொண்ட செடிகளையும், வேறுவேறு வண்ண இலைகளைக் கொண்ட செடிகளையும், பூச்செடிகளுக்கு பதில் வளர்க்கலாம். இவை நாள்பட வளர்க்கக் கூடியவை என்பதோடு இதற்கு பராமரிப்பும் குறைவு.
தோட்டம் மையப் பகுதியில்
இதன் மாறுபட்ட வண்ணங்கள் தோட்டத்திற்கு மேலும் அழகை கூட்டும். தோட்டத்திற்கு விரைவாகவும், எளிமையாகவும் வண்ணம் சேர்க்க விரும்புபவர்கள். தொங்க விடக்கூடிய தொட்டிகளை பயன்படுத்துங்கள். இதற்கு சிறிய இடம் இருந்தாலே போதுமானது. பராமரிப்பு நேரமும் குறைவு.
பார்வையை ஈர்க்கக் கூடிய வகையில் உங்கள் தோட்டத்தில் பிரதான பகுதியாக ஒன்றைத் திட்டமிட்டு வையுங்கள். இத்தனை மையப் பகுதியில் பார்வை ஏற்பட்டு விட்டால் தோட்டத்தில் செடி கொடிகளை காண ஆவலை தூண்டும். தோட்டத்தின் பிரதான பகுதியில் நீடித்து போக்கக் கூடிய செடிகளை தேர்ந்தெடுக்கவும். பார்ப்பதற்கு சோர்வாக தோன்றக் கூடிய செடி வகைகளை தவிர்த்து விடுவது நல்லது.