அடங்கமறு நாயகி ராஷி கண்ணாவின் அடங்கா அன்பு
அடங்கமறு நாயகி ராஷி கண்ணா இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய இளைஞர்கள் இந்தியாவின் நாளைய எதிர்காலம் என்று பலர் பலவிதமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இவரின் 30வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் ரசிகர்களை காணொளி மூலமாக சந்தித்து நன்றி கூறி ஓர் அற்புதமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
ராஷி கண்ணா
2013 திரை உலகிற்கு வந்த ராஷி கண்ணா 2018 தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் இமைக்கா நொடிகள் அடங்க மறு போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா.
https://www.instagram.com/p/CINcYdbBmXv/?igshid=16py7s2jit473
வரும் வருடங்களில் மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்கள் பலவற்றை அவரது சினிமா பட்டியலில் வைத்துள்ளார். அரண்மனை 3 துக்ளக் தர்பார் அதில் குறிப்பிடத்தக்கவை.
மேலும் படிக்க : எடைக்குறைப்பு கதாநாயகிகளின் பட்டியலில் அடுத்தது ஹன்சிகா
சமூக வலைத்தளம்
இன்று ராசிக் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்க அதற்கு பதிலளிக்கும் வகையில் ரசிகர்களின் அன்பை பாராட்டும் வகையில் நேரலையாக காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
https://www.instagram.com/tv/CINRqp6Iho2/?igshid=1v4k7by5ixbqd
இந்த காணொளியில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி முக்கியமான கருத்தை ரசிகர்களின் மத்தியில் வைத்துள்ளார். ‘கரங்களில் கரை படியும் விதமாக நல்ல காரியத்தில் ஈடுபட்டுள்ளேன்’ என்ற வாக்கியத்துடன் பிறந்தநாளையொட்டி மரங்களை நட்டுள்ளார்.
நல்ல மனதுடன் வாழ்வாங்கு வாழ மக்களின் சார்பாக சிலேட்குச்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை ராஷி கண்ணாவிற்கு தெரிவிக்கிறது.
மேலும் படிக்க : புத்தம் புது காலை சபாஷ்! செமையான ட்ரெய்லர்