ரீல் வில்லன் ரியல் ஹீரோ மற்றும் கதாசிரியர்: சோனு சூத்
ஹிந்தி நடிகர் சோனு சூத் என்பதை விட ஒஸ்தி படத்தின் வில்லன் என்று சொன்னால் அனைவருக்கும் நன்றாக நினைவுக்கு வரும். ரீல் லைஃப் வில்லனாக வரும் சோனு சூத் ரியல் லைப்பில் ஹீரோவாக திகழ்கிறார். கொரோனாவால் இடம்பெயர்ந்து மாட்டிக்கொண்ட தொழிலாளர்களுக்கு உதவிபுரிந்து ஹீரோவாக திகழ்கிறார்.
இந்தியில் பிரபலமான நடிகரான சோனு சூத் தமிழ் திரையுலகில் ஒஸ்தி என்ற படத்தில் வில்லனாக நடித்தவர். அதற்கு முன்பாக தெலுங்கில் எடுக்கப்பட்ட அருந்ததி படம் தமிழில் மொழியில் வெளியாகி கோர கொடூர வில்லனாக அனைவரையும் திகில் ஊட்டினார்.
நற்செயல்
வட இந்தியாவில் வசித்து வரும் சோனு சூத் இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களில் தொழிலுக்காக இடம்பெயர்ந்து மாட்டிக்கொண்ட கூலித் தொழிலாளர்களை அவரவர் வீட்டிற்கு திரும்ப பேருதவி செய்துள்ளார்.
சோனு சூத் ஒரு குழு அமைத்து ஹெல்ப்லைன் தொலைப்பேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் சேவை உருவாக்கினார். இடம்பெயர வேண்டிய மக்களை அதன் மூலம் புகார்களை பதிவிட்டனர்.
குழுவைக் கொண்டு வேலை செய்தாலும் சோனு சூட் தாமாக களமிறங்கி மக்களுடன் உரையாடி 16ல் இருந்து 18 மணி நேரம் அவர்களுடன் நேரத்தை செலவிட்டு பேருந்து ரயில் தேவைப்பட்டால் விமான சேவையும் ஏற்பாடு செய்து தந்தார். 45 வயதுடைய சோனு சூட் களத்தில் உற்சாகத்துடன் ஒவ்வொருவருக்கும் சேவை புரிந்து அவர்கள் மனநிறைவுடன் டாட்டா காண்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
‘உதடுகளில் இருக்கும் சிரிப்பு கண்களில் ஆனந்தக்கண்ணீர் கைகள் கூப்பி கூறும் அவர்களின் நன்றி என இந்தப் பயணம் ஒவ்வொரு நாடோடி களையும் அவரவர் இடத்திற்கு சேர்க்கும் வரை அடங்காது. இந்த பணி தொடரும்’ எனக் கூறியுள்ளார் சோனு சூத். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காயப்பட்டு அல்லது இரந்த 400 இடம்பெயர்ந்த மக்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார ஊதியம் தந்து உதவி செய்யப் சபதம் பூண்டுள்ளார் சோனு சூத்.
கதாசிரியர்
மார்ச் முதல் தற்போது வரை மூன்றரை மாதமாக இந்த பணியை செய்து கொண்டுவரும் சோனு சூத் ஒவ்வொருவரின் கதையை கேட்டு அதனை மனதில் வாங்கி மக்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகமாக பதிவிட எழுத்தாளராக மாறுகிறார்.
பெங்குவின் ரேண்டம் ஹவுஸின் வெளியீட்டாளர், எபரி பப்ளிஷிங் மற்றும் விண்டேஜ் பப்ளிஷிங், மைலி ஐஸ்வர்யா, இந்த புத்தகம் சூத்தின் அற்புதமான பயணத்தின் கதையை ஒன்றாகக் கொண்டுவரும் என்றார். அந்தப் பயணம் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் திடீரென விடப்பட்ட மக்கள்; நம்பிக்கை மற்றும் ஒற்றுமை உணர்வால் நாம் அனைவரையும் பிணைக்கிறார்கள் என்ற கதைக் கருவை கொண்டு பயணிக்கும்.