நாம் வேண்டியதை வேண்டிய வண்ணமே கிடைக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 38
நாம் தினமும் அபிராமித் தாயின் புகழை அவள் அருளைப் பெறுவதற்கு வேண்டிய வழிகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்பாடலில் நம் அபிராமி பட்டர் அபிராமி அன்னையின் அழகை வர்ணித்து பாடியுள்ளார்.எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானின் துணைவியான நமது அபிராமித் தாயை வணங்குவதன் மூலம் நாம் நினைத்ததை வேண்டிய வரங்களை நமக்கு அவள் தருவாள். அதற்குண்டான பாடலை இப்போது பார்க்கலாம்…

பாடல்
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
பாடல் விளக்கவுரை
என் அன்னை அபிராமி பவளக்கொடி போன்ற வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி அது மட்டுமா? எம்பெருமான் சங்கரனாரின் தவத்தைக் குலைத்தவள் எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படி உள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவர்களை பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ரவி அபிராமி அன்னையை பணிந்து வணங்குங்கள்.
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் இப்பாடலுக்கு உரை விளக்கம் கொடுத்துள்ளார்
இந்தப் பதிகத்தை தொடர்ந்து படித்து வர நம் அபிராமித் தாயின் அருள் மட்டுமல்ல நாம் வேண்டியவை வேண்டியபடியே கிடைக்க வழி செய்வாள்….
மேலும் படிக்க ; மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்