பழைய வினைகளின் வலிமை அழிய அபிராமி அந்தாதியின் பாடல் – 36
வாழ்வில் நடக்கும் துயரங்கள் ,வழிகளாலும் துவண்டு கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு சக்தியை கொடுத்து வாழ்வு செழிக்கவும், வளமுடன் நலமாக வாழவும் சக்தி வாய்ந்த மந்திர வார்த்தைகளாக அபிராமித்தாயின் அபிராமி அந்தாதி பாடல் விளங்குகிறது. பாடல்களை படித்து அன்னையின் அருளை பெற்று இன்பமான மிக அழகான வாழ்க்கையை அடையவும்…
பாடல்
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
பாடல் விளக்கவுரை
குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.
இவ்வாறு கண்ணதாசன் அவர்கள் பாடலுக்கு விளக்கவுரை கூறுகிறார்.
மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்