ஆன்மிகம்ஆலோசனை

ஆனி மாத அமாவாசை..!!

அம்மாவாசை 20.6.2020 மதியம் 12.30 முதல் 21.2.2020 பகல் 12.45 வரை ஆனி மாத அமாவாசை ஆகும். அமாவாசை வழிபாடு செய்பவர்கள் குலதெய்வத்தை வழிபடுவது, முன்னோர்களை வழிபடுவது வாழ்வில் பல முன்னேற்றங்களைப் பெற்றுத் தரும்.

முன்னோர்களை வழிபடுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அமாவாசை வருவதால் அன்றைய தினம் வழிபட வேண்டும். குலதெய்வத்தை வழிபடுபவர்கள் சனிக்கிழமை அன்று மாலை குல தெய்வத்திற்கு பூஜை புனஸ்காரங்களை செய்யலாம்.

அமாவாசை வழிபாடு வாழ்வில் முக்கியமான வழிபாடாகும். நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும், குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தையும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தையும், உடன்பிறந்தவர்களின் ஆசீர்வாதத்தையும், பெறுவதற்கு உகந்தது இந்த அமாவாசை தினம்.

எப்பொழுதும் குலதெய்வத்தை வழிபடும் போது முன்னோர்களின் ஆசீர்வாதம், பெற்றவர்களின் ஆசீர்வாதம், உடன்பிறந்தவர்களின் ஆசீர்வாதம், எங்களுக்கு எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு வழிபாட்டிற்கு முன்பாகவும் முதலில் உங்கள் குல தெய்வத்தை வழிபட வேண்டும். கல்யாணம் ஆகாதவர்கள் தன் தந்தையின் குல தெய்வத்தை வழிபட வேண்டும். கல்யாணம் ஆன பிறகு பெண்கள் கணவனின் குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

கல்யாணம் ஆன பிறகு பெண்கள் கணவரின் குலதெய்வத்தை வழிபட்டாலும், தன் தகப்பனாரின் குல தெய்வத்தையும் நினைத்து வழிபடலாம். இதனால் இரண்டு குலதெய்வத்தின் உடைய ஆசீர்வாதமும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். இதை ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

இதை முறையாக செய்தால் குடும்பத்தில் அனைத்து சகலவித நன்மைகளும், சௌபாக்கியங்களும் வந்து சேரும். இன்றைய தினங்களில் அசைவ உணவுகளை சமைக்க கூடாது. வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குலதெய்வத்திற்கு பிரியமான உங்களால் முடிந்த நைவேத்தியங்களை படைத்து தூப, தீப ஆராதனை காமித்த பிறகு மற்ற தெய்வங்களை வழிபடலாம்.

குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அந்த தெய்வத்தின் வேண்டுதல்கள் நிறைவேறும். என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் அனைவரும் குலதெய்வத்தை வழிபட்டு பிறகு தான், தன் இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் வழிபடுவார்கள்.

குலதெய்வத்தின் அருள், பிற தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைத்தாலே, நம் வாழ்வில் பல சங்கடங்கள் தீர்ந்து வெற்றிப்பாதையை நோக்கி செல்ல முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *