புல்லிங்களா புயல் ஆரம்பம் பாதுகாப்பா இருங்க..
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் புயல் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை அறிவித்துள்ள மையம் அந்த புயலுக்கு ஆம்பன் என பெயர் வைத்துள்ளது. இந்த ஆம்பன் புயலானது நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும், திசைமாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து போகும், இது வங்கதேசத்தை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் நேரடி மழை இருக்காது. ஆனால் ஒடிசா போன்ற கடலோர மாநிலங்களில் எப்பொழுது என்ன நடக்கும் என்ற அச்சமானது அனைவரையும் ஆட்டிப் படைக்கின்றது. இந்த நேரத்தில் ஒடிசா அரசு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், அனைவருடைய சாதி சான்றிதழ் பள்ளி சான்றிதழ் ஆகிய அனைத்தையும் பத்திரமாக எடுத்து வைக்குமாறு அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு போதாத காலம்
இந்த இந்த புயலானது வடமேற்கு பகுதியான ஆந்திரா- வையும், மிகுந்த அளவில் பாதிக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிற்கு இது போதாத காலம் என்று சொல்லலாம். இதனால் மக்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கவும். தேவைப்படும் அடிப்படை பொருட்களைப் பாதுகாத்து வைக்கவும். தொடர்ந்து எது தேவை என குறிப்பு எடுத்து வைக்கவும் இது அவசியமானதாகும்.
மக்கள் அச்சத்துடன்
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா. இந்த நிலையில் கொரோனா வின் தாக்கம், ஊரடங்கு உத்தரவு, மச்சான் குறைக்கு, பற்றாக்குறைக்கு, ஆம்பன் புயல் தன் பங்குக்கு வந்து செய்யும் என்றும் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அரசாங்கம் திக்குமுக்காடி நிற்கின்றது.
சென்னைக்கு இது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், எப்போது எது நடக்கும் என்பது திக்கு மட்டுமே வெளிச்சம். இந்த நிலையில் தமிழக அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல தேவைப்படும் வசதிகளை செய்து வருகிறது.