ஆன்மிகம்ஆலோசனை

அமாவாசை படையல் செய்வது எப்படி

அமாவாசை படையல் செய்வது எப்படி? வீட்டை முதல் நாளே சுத்தம் செய்து விட வேண்டும். தலையணை உறை, போர்வைகளை சுத்தம் செய்து வைக்கவும்.

அம்மாவாசை அன்று காலை வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போடக் கூடாது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு உங்களால் முடிந்த தானத்தை பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

அகத்திக்கீரை, கோதுமை தவிடு, வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம் இந்த காலத்தில் பசுவிற்கு காலை 6 – 7 மணிக்குள் கொடுக்க வேண்டும்.

இன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். பொதுவாக இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இன்றைய தினம் காலை உணவு அருந்த கூடாது. குடும்பத்தலைவி படையளுக்கு தேவையான உணவுகளை சமைத்து வைத்து விட வேண்டும்.

இறந்தவரின் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து படத்திற்கு துளசி மாலை, பூ வைத்து அருகே காமாட்சி விளக்கு ஒன்றை வைத்து பொட்டு வைத்து, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

அவர்கள் பயன்படுத்திய அவரவர்களின் குல வழக்கப்படி படையல் போட்டு படைக்க வேண்டும். வீட்டில் சமைக்காமல் ஓட்டலில் வாங்கி வைப்பதென்றால் வீட்டில் சர்க்கரைப்பொங்கல் செய்து வைக்க வேண்டும்.

பிறகு பத்தி, சூடம் காட்டி அவர்களுக்கும் படையளுக்கும் தீபம் காட்டி வழிபட்டு வேண்டிக் கொள்ளலாம். பிறகு படைக்கப்பட்ட படையல் சிறிய இலையில் எடுத்து காக்கைக்கு வைத்த பிறகு வீட்டில் உள்ள அனைவரும் உண்ண வேண்டும். இவ்வாறு படையல் போட்டு அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *