பேபி கார்ன் மசாலா
பேபி கார்ன் அதிகளவு உடலுக்கு தேவையான சத்தை கொண்டுள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், எலும்புகளுக்குத் தேவையான ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் வயதான காலத்தில் எலும்புகள் முறிந்து போவதை தவிர்க்கின்றன.
சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் உதவுகின்றது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள். ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து அனிமீயா எனப்படும் ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின்-பி போலிக் அமிலம், விட்டமின் சி, நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பேபி கார்ன் மசாலா
தேவையான பொருட்கள் : ப்ரஷ் க்ரீம் ரெண்டு ஸ்பூன், பேபி கார்ன் அரை கப், பால் அரை கப், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது அரை கப், சீரகம் அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மல்லித் தூள் அரை ஸ்பூன், கரம் மசாலா ஒரு ஸ்பூன், கொத்தமல்லி சிறிது, எண்ணெய், உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு ஸ்பூன்.
வதக்கி அரைப்பதற்கு பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, பூண்டு 4, எண்ணெய் ஒரு ஸ்பூன்.
செய்முறை : முதலில் பேபிகார்னை துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து மென்மையாக வதக்கி இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இதனுடன் வெண்ணையையும் சேர்த்து சூடானதும், சீரகத்தை போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் பிரட்டி இதனுடன் சர்க்கரையையும் சேர்த்துக் கிளற வேண்டும்.
கடைசியாக பாலை ஊற்றி கிரேவி போன்று வந்ததும். தீயை குறைத்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறலாம். சுவையான பேபிகார்ன் மசாலா தயார்.