சென்னையை தாண்டிய கொரோனாவின் தாக்கம்
சென்னையை வலைத்து அடித்துக் கொண்டிருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது சென்னையை தாண்டி தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் எல்லாம் தாக்குகின்றது.
சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சுமார் 5,855 பெயருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 6,993 பேர் கொரோனா பாதிப்பால் வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 716 என தகவல்கள் கிடைத்துள்ளன. மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 37 இதில் அடங்குவர்.
தமிழ்நாட்டில் இன்று 77 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 3,521 பேர் கொரோனா பலியாகியுள்ளனர். கொரோனா அதிகரிப்பு ஏற்ற வண்ணம் அதன் பாதிப்பு குறைந்து குணமடைந்து சுமார் 5,273 பேர் சென்றுள்ளனர்.
ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 249 பேர் இதுவரை தமிழ்நாட்டில் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை 54,896 மக்கள் கொரோனா அதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் என்று 1,138 பேர் கொரோனா அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 857 ஆக அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூலை கொட்டம் தொடங்கும் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்க ஆகஸ்டில் ஊரடங்கு தளர்வு அடுத்த கட்டம் போக இருக்க இது என்னடா இது தமிழகத்திற்கு வந்த சோதனை என்ற அச்சம் மக்களை வாட்டுகிறது.
மருந்து இருக்கிறது. ஒரு கூட்டம் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்கிறது. மற்றொரு கூட்டம் இறுதியில் அல்லல்படும் பொதுமக்கள் கூட்டம். பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்களும் நகர தொடங்கி விட்டனர். வீட்டில் இருந்தால் அன்றாட படைப்பு நடத்துவது சிக்கலாகி விடும் என்று ஆதங்கத்துடன் வாழ்வை நடத்துகின்றனர்.