பணத்தை மிச்சப் படுத்துங்கள் ஹோம்லி ரிமெடீஸ்க்கு மாறுங்க
முகம் பொலிவு பெற வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து தீர்வுகள் காண முடியும். எந்த கிரீம்களையும் பயன்படுத்த வேண்டாமே. சோர்வான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் நாம் உடனடியாக அதைப் போக்க நிச்சயமாக ஏதாவது ஒரு கிரீமை வாங்கி அப்ளை செய்ய கடைக்குச் செல்வோம்.
அதற்கு பதிலாக வீட்டிலேயே உள்ள பொருட்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான வேலை காரணமாக, நமது தோற்றப் பொலிவை கவனிக்காமல் விடும் போது அழுத்தம் காரணமாக முகம் சோர்வடைந்து நிரந்தரமாக ஒரு தோற்றத்தைத் தர ஆரம்பிக்கும்.

முட்டைக்கோஸ் சாறு, ஆலிவ் ஆயில், தேங்காய் பால், தக்காளி ஜூஸ், பாலாடை, ஆப்பிள் சைடர் வினிகர் இவற்றை பயன்படுத்தலாம். மேலும் பழக்கூழ் பப்பாளி, அண்ணாச்சி பழக்கூழ் பயன்படுத்தலாம்.
இவற்றில் தினமும் ஒவ்வொன்றாக முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் காயவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். சருமத்தில் இருந்து நச்சுகளை அகற்றவதற்கும், இளமையான பிரகாசத்தை பெறுவதற்கும் எளிமையாக வீட்டிலேயே இவற்றைப் பயன்படுத்தலாம்.
செல்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகப்பொலிவு பெறும். கண்களுக்கு தேவையான விட்டமின் சத்தும் கிடைக்கும். உங்கள் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. புத்துணர்ச்சி பெறுவதுடன் இயற்கையான சரும ஈரப்பதத்தை பெறவும், உடனடியாக பொலிவைத் தரும்.

உங்களுடைய முகம் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்க நீங்கள் இவற்றை தொடர்ந்து வீட்டிலேயே செய்து வரலாம். மேலும் க்ரீம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய அலர்ஜி தடுக்கப்படும். சருமத்திற்கு பாதுகாப்பு நிவாரணியாகவும் இருக்கும்.
மேலும் சந்தன பவுடர், வெள்ளரிக்காய், ரோஸ்வாட்டர், இளநீர் என்று இயற்கையாகவே நம் வீட்டிலே கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தினால். நம் அழகை மேம்படுத்த முடியும். பணத்தை மிச்சப்படுத்தலாம் அழகையும் மேம்படுத்தலாம்.