மௌனகுரு அருள்நிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அரசியல் வாரிசாக இருந்தாலும் திரையுலகில் கலக்கும் அருள்நிதிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#அருள்நிதி தமிழரசு #Arulnithi Tamilarasu
மண்ணில் மறைந்து மனதில் மறையாத முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேரன் அருள்நிதி தமிழரசுக்கு இன்று பிறந்தநாள். ஸ்டாலினின் அண்ணனான தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதி. பலத்த அரசியல் பின்னணியுடன் திரையுலகத்தில் வெற்றிகரமாக பயணத்தை தொடர்கிறார் அருள்நிதி.
அருள்நிதி
21 ஜூலை 1987 சென்னையில் பிறந்த அருள்நிதிக்கு என்று 33 ஆவது பிறந்தநாள். 2010இல் பாண்டியராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய அருள்நிதிக்கு அந்தப் படத்திலேயே அறிமுகம் நடிகருக்கான சிறப்பு விருது கிடைத்து வெற்றிகரமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கினார்.

வம்சம் படம் கிராமத்துப் பின்னணியில் அமர்க்களமான கிராமத்து வாசியாக நடித்த அருள்நிதி அந்தக் கதாபாத்திரத்துடன் இணைந்து விட்டார். அந்த மாடு பிடிக்கும் தோரணையும் கிராமப்புறங்களில் கைப்பேசிக்கு நெட்வொர்க் கிடைக்காமல் மரத்தின்மீது கைபேசியை தொங்கவிட்டு ஹெட்செட் மூலம் பேசும் சீன்கள் ஹேட்ஸ் ஆஃப்.
அதனாலதானங்க கிராமப்புறங்களில் சிட்டுக்குருவிய பார்க்க முடியுது.
இந்த பத்து வருடங்களில் எண்ணக்கூடிய அளவுக்கு கொஞ்சம் படங்கள் நடித்திருந்தாலும் மர்மமாக திரில்லராக தனித்துவமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஆறுவது சினம் படத்தில் ஒரு குடும்பஸ்தராக வரும் பாடலில் தந்தையாக கணவனாக அந்த கதாபாத்திரத்தில் தன்னை ஊடுருவி நடித்திருந்தார். அதே படத்தில் காவல் அதிகாரியாக சீரியஸாகவும் கலக்கியிருந்தார்.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் காதலிக்கும் வாலிபனாக இருந்தாலும் பொறுப்புடன் இருக்கும் கதாபாத்திரத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் காதலை விட வாழ்க்கையில் சாதிப்பதும் வாழ்வதும் முக்கியம் என்று விளக்கும் வண்ணம் அந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.
கே-13 படத்தில் இயக்குனர் வேடத்தில் நடித்த நடிகருக்கு பலத்த கரகோஷங்கள் தந்து பாராட்ட வேண்டும். படத்தை இயக்கும் இயக்குனர்கள் அந்தப் படத்திற்காக எந்த அளவிற்கு உழைக்கிறார்கள் என மக்களுக்கு புரியும் வகையில் அருள்நிதி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சிறிய காலத்தில் சில படங்கள் கொடுத்து திரையுலகில் தனக்கென்று இடம்பிடித்த அருள்நிதிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.