கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தல அஜித் செய்த செயல்
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது உலகம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 44 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
மேலும் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை இந்தியாவில் சமூக பரவல் ஏதும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலையில் மாறாமல் தடுப்பதற்காக இந்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினி
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தமிழக அரசு ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்திருக்கிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 200 வார்டுகளிலும் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பவர் பிரையர் உட்பட 500 இயந்திரங்கள் மூலமும் மற்றும் மிகப்பெரிய கட்டிடங்களில் 75 ஜெட் ராடு இயந்திரங்கள் மூலமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
50,000 சதுர அடி
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிருமி நாசினி தெளிக்கும் நான்கு ட்ரோன் எந்திரங்களை உருவாக்கியுள்ளது. இது 50,000 சதுர அடி பரப்பிற்கு கிருமிநாசினி தெளிக்க இயலும் திறன் கொண்டது. இந்த ட்ரோன் கண்டுபிடிப்பில் நடிகர் தல அஜித்திற்கும் பங்கு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி கேம்பஸில் பயிலும் மாணவர்களை வைத்து ஆளில்லா விமானங்களை ஆய்வு செய்வதற்காக தக்ஷா எனும் குழு உருவாக்கப்பட்டது.
இந்த குழுவிற்கு நடிகர் தல அஜித்தை ஆளுநராக நியமித்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த “மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யூஏவி சேலஞ்ச்” என்ற போட்டியில் அஜித் வழிநடத்திய தஷா குழு சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நன்றி!