SSC மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு
இந்தியா முழுவதுமான மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு நம் கணினியின் மூலம் காத்திருக்கிறது.
மத்திய அரசாங்க துறையான ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) 1564 துணை ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவில் பல இடங்களில் இந்தப் பணிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வி தகுதி
01-01-2021க்குள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமானவை ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள இணைப்பை பார்க்கவும்.
வயது வரம்பு
துணை ஆய்வாளர் பணியிடத்திற்கு 20-25 வயதுடைவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வயது 01-01-2021 அன்றோ அதற்கு உள்ளோ முடிந்திருக்க வேண்டும். அதாவது 02-01-1996 மற்றும் 01-01-2001 இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இது பொதுவான தகவல் அவரவர் பிரிவிற்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம்
₹100 பொது விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பிரிவுக்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு. கட்டணத்தை இணையதளம் (அ) வங்கிகள் மூலமாக செலுத்தலாம்.
தேர்வின் வடிவம்
தேர்வில் பேப்பர் -1, பிசிகல் ஸ்டாண்டர்ட் டெஸ்ட் (பிஎஸ்டி) / பிசிகல் எண்டூரன்ஸ் டெஸ்ட் (பிஇடி), பேப்பர் -2 மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனை (டிஎம்இ) ஆகியவை இருக்கும். தேர்வின் இந்த நிலைகள் அனைத்தும் கட்டாயமாகும்.

முக்கியமான தேதிகள்
தொடக்க தேதிகள்: 16-07-2020 (23:30)
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18-07-2020 (23:30)
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: 18-07-2020 (23:30)
ஆஃப்லைன் சல்லனின் தலைமுறைக்கான கடைசி தேதி மற்றும் நேரம்: 20-07-2020 (23:30)
சல்லன் மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (வங்கியின் வேலை நேரத்தில்): 22-07-2020
கணினி அடிப்படையிலான தேர்வின் தேதிகள் (காகிதம் -1): 29-09-2020 முதல் 05-10-2020 வரை
கணினி அடிப்படையிலான தேர்வு தேதி (காகிதம் II): 01-03-2021
அதிகாரப்பூர்வமான தகவல்களை பெற இணையதளத்தில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
துணை ஆய்வாளராக லட்சியம் கொண்டுள்ள அனைத்து இந்தியர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேதி 16-07-2020 முதல் 18-07-2020 வரை.