ராணா நிச்சயதார்த்தத்தில் சைத்தன்யாவுடன் நம்ம சமந்தா
மாமன் மச்சான் உறவு எப்போதுமே சிறப்பானது அதில் இப்ப டிரெண்டிங்கில் கலக்கி கொண்டிருப்பது ராணா அவரது மச்சான் நாக சைதன்யா ஆவார்.
ராணா டக்குபதியின் நிச்சயதார்த்த விழாவில் நாக சைதன்யா அவருடைய மனைவியான சமந்தாவுடன் கலந்து கொண்டு போஸ் கொடுத்தார். இதில் சமந்தா க்யூட் மஞ்சள் நிற சல்வாரில் போஸ் கொடுத்திருந்தார். தம்பதியினரின் க்யூச் லுக்கினை சமந்தா தன் இன்ஸ்டாவில் பதிந்திருக்க அனைவரும் க்யூட் கப்பில் என கமெண்ட்ஸ்களை தெரித்தனர்.
நாகசைதன்யா மற்றும் சமந்தா ஒரு பக்கம் அத்துடன் ராணா அவருடைய காதலி மிஹீ இன்னும் சிறப்பாக போஸ் கொடுத்திருக்காங்க, ராணா டகுபதி தென்னிந்தியாவின் ஆறு மொழிகளில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார் அவர் நடித்த பாகுபலியின் பல்வால் தேவன் வில்லன் கேரக்டர் படு ஜோராக இன்றும் அனைவரது நினைவிலும் உள்ளது.

கோலிவுட்டில் அஜித்தின் ஆரம்பம் படத்தின் மூலமாக அஜித்தின் நண்பராக ராணா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து அவர் தமிழில் எடுக்கப்பட்ட பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் காடன் என்னும் படத்தில் ஒருசேர நடித்து வருகின்றார்.
ராணா டகுபதியின் இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் அவருடைய உறவினராக விளங்கும் நாகசைதன்யா சிம்பிளாக அவருடைய மனைவி நம்ப சமந்தாவுடன் கலந்துகொண்டார் மேலும் அவருடன் இந்த விழாவில் நடிகர் வெங்கடேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து இந்த நிச்சயதார்த்த நிகழ்வினை நடத்தியுள்ளனர். இதில் ராணா மற்றும் அவரது காதலி குதூகலமாக காணப்பட்டனர். இனி பல்வால்தேவன் புதுமாப்பிள்ளை தோரணையில்தான் வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ராணா பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் டக்குபதியின் மகன் என்பதால் அவருக்கு சினிமா பக்கம் இருந்து வாழ்த்து மழை ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கின்றது.