டின்பிஸ்சி மற்றும் யுபிஸ்சி போட்டி தேர்வுக்கான அன்றாட தகவல் -24.10.2026
உடன் (UDAN) திட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) கீழ் தொடங்கப்பட்ட பிராந்திய இணைப்புத் திட்டமான ‘UDAN’ (Ude Desh ka Aam Nagrik) வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுவரை 687 பிராந்திய வழித்தடங்கள் இயக்கப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்துள்ளனர்.
உடன் (UDAN) திட்டம் என்பது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் (MoCA) நாட்டின் பிராந்திய விமான இணைப்பை (Regional Connectivity Scheme – RCS) மேம்படுத்தவும், எளிய மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ளும் வகையில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும் தொடங்கப்பட்ட ஒரு முக்கியத் திட்டமாகும்.
அக்ரிவோல்டாயிக்ஸ் உலக மாநாடு 2026 (AgriVoltaics World Conference):
புதுதில்லி பாரத் மண்டபத்தில் 7வது அக்ரிவோல்டாயிக்ஸ் உலக மாநாடு தொடங்கியது. தெற்கு உலக நாடிகளில் (Global South) இம்மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். வேளாண் நிலப்பரப்பில் பயிர் சாகுபடியுடன் சோலார் மின் உற்பத்தியையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை இது ஊக்குவிக்கிறது.
ஒரே நிலப்பரப்பில் விவசாயப் பயிர்களைச் சாகுபடி செய்துகொண்டே, அதே நிலத்தின் மீது சோலார் பேனல்களை (Solar Panels) அமைத்து மின்சாரமும் உற்பத்தி செய்யும் நவீன தொழில்நுட்ப முறைக்கு ‘அக்ரிவோல்டாயிக்ஸ்’ என்று பெயர்.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் தேவை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்ய இது உதவுகிறது.சோலார் தகடுகளின் நிழல் காரணமாக பயிர்களின் மீது படும் அதிகப்படியான சூரிய வெப்பம் குறைக்கப்பட்டு, மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் நீர்ப்பாசனத் தேவை குறைகிறது.
சர்வதேச ஐக்கிய நாடுகள் நாள் (UN Day 2026)
ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட நாளாகக் கொண்டாடப்படுகிறது.முக்கியத்துவம்: இந்த ஆண்டு ஐ.நா. சபையின் 81-வது ஆண்டு நிறைவு ஆகும். 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. பட்டயம் (UN Charter) நடைமுறைக்கு வந்தது.
ஓஎன்ஜிசி (ONGC) புதிய தலைவர் நியமனம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) புதிய தலைவராக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களின் (Maharatna/Navratna) தலைவர்கள் நியமனம் மற்றும் அமைச்சரவையின் நியமனக் குழுவின் (ACC) அதிகாரம் சார்ந்த கேள்விகளுக்கு இது உதவும்.
ஆசிய Para விளையாட்டுப் போட்டிகள் 2026
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஆசிய Para விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பாரா-பேட்மிடன் வீரர்களான நிதேஷ் குமார் மற்றும் நவீன் சிவகுமார் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.
2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் (Asian Para Games 2026) ஜப்பான் நாட்டின் நகோயா (Nagoya) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களைக் குவித்தது. குறிப்பாக பேட்மிட்டன் பிரிவில்
நிதேஷ் குமார் (Nitesh Kumar) – ஆண்கள் ஒற்றையர் SL3 பிரிவில் தங்கம் வென்றார். நவீன் சிவகுமார் (Naveen Sivakumar) – ஆண்கள் ஒற்றையர் SL4 பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்

