இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -27.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 27.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 10, ஞாயிற்றுக்கிழமை, September 27, 2026 பஞ்சாங்கம் –
திதி : 08:58 PM வரை பிரதமை பின்னர் துவிதியை
நட்சத்திரம் : உத்திரட்டாதி 11:08 AM வரை பிறகு ரேவதி
யோகம் : வ்ருத்தி 11:16 AM வரை, அதன் பின் துருவம்
கரணம் : பாலவம் 09:42 AM வரை பிறகு கௌலவம் 08:59 PM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 03.15 மணி முதல் 04.15 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை
எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை
குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (27.09.2026)
மேஷம் -சினம் உண்டாகும்
ரிஷபம் -அமைதி உண்டாகும்
மிதுனம் -மன நிறைவு
கடகம் -செலவு கூடும்
சிம்மம் – வெற்றி நிச்சயம்
கன்னி -பெருமை சேரும்
துலாம்-நன்மை பெருகும்
விருச்சிகம்-ஆதரவு கிடைக்கும்
தனுசு -தனலபம் பெருகும்
மகரம் -ஆரோக்கியத்தில் சுகம்
கும்பம் -போட்டி கூடும்
மீனம் -பொறுமை அவசியம்
தமிழ் தந்தை ஆதித்தனார் பிறந்த தினம்
தமிழ்த் தந்தை சி. பா. ஆதித்தனார் (1905–1981) தமிழ் இதழியல், அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றிய மூத்த தலைவர்.
1942-இல் ‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கினார். எளிய தமிழில் செய்திகளை எழுதி, பாமர மக்களும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்.
1958-இல் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கி தனித்தமிழ்நாடு மற்றும் தமிழ் உரிமைகளுக்காகப் போராடினார்.
தமிழ் இதழியலில் முதன்முதலாக பெரிய தலைப்புச் செய்திகள் (Headlines), எளிய தமிழ் நடை மற்றும் படங்களைப் பயன்படுத்திப் புரட்சி செய்தார்.
எளிய தமிழ் மூலம் அடித்தட்டு மக்களிடம் செய்தித் தொடர்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும், தமிழ் மொழிப் பற்றிற்காகவும் இவருக்குத் ‘தமிழ்த் தந்தை’ என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.

