இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -26.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 26.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 9, சனிக்கிழமை, September 26, 2026 பஞ்சாங்கம் -திதி : 10:18 PM வரை பௌர்ணமி பின்னர் பிரதமைநட்சத்திரம் : பூரட்டாதி 11:32 AM வரை பிறகு உத்திரட்டாதியோகம் : கண்டம் 01:17 PM வரை, அதன் பின் வ்ருத்திகரணம் : பத்திரை 10:47 AM வரை பிறகு பவம் 10:19 PM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (26.09.2026)
மேஷம் -மன நிறைவு
ரிஷபம் -கோபம் அதிகரிக்கும்
மிதுனம் -பயம் கூடும்
கடகம் -போட்டி அதிகரிக்கும்
சிம்மம் -செலவு அதிகரிக்கும்
கன்னி -ஆரோக்கியத்தில் சுகம்
துலாம்-மன உறுதி
விருச்சிகம்-நட்பு அதிகரிக்கும்
தனுசு -அமைதி நிலவும்
மகரம் -புகழ் ஓங்கும்
கும்பம் -சாந்தம் உண்டாகும்
மீனம் -மன நிறைவு
உமா மஹேஸ்வர விரதம்
உமா மகேஸ்வர விரதம்) என்பது சிவபெருமானையும், பார்வதி தேவியையும் (உமாதேவி) ஒன்றாக இணைத்து வழிபடக்கூடிய மிகச் சிறப்பு வாய்ந்த விரதமாகும்.
புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி அன்று இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது,கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, தம்பதியர் இடையே அன்பு, ஒற்றுமை அதிகரிக்கும்.திருமணத் தடைகள் விலகி விரைவில் நல்ல வரன் அமையும்.,குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நன்மக்கள் பேறு கிடைக்கும்.வறுமை நீங்கி, செல்வம், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் அமைதி பெருகும்.
விநாயகரை முதல் தெய்வமாக வழிபட்டு, விரதத்தை நல்லபடியாக முடித்துத்தர வேண்டிக்கொள்ள வேண்டும்.
உமா மகேஸ்வரருக்குப் பழங்கள், பாயசம், சுண்டல் அல்லது நைவேத்தியப் பொருட்களைப் படைத்து, வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

