செய்திகள்தமிழகம்பன்னிரண்டாம் வகுப்புபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

செப்டம்பர் 21 நடந்த முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வுகள்

செப்டம்பர் 21 நடந்த முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வை காணலாம். இதில் விளையாட்டு மற்றும் இதர நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கொச்சி – கன்னியாகுமரி – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம்

கேரளா மற்றும் தெற்கு தமிழ்நாட்டை இணைக்கும் வகையில் 424.65 கி.மீ நீளமுள்ள கொச்சி-கன்னியாகுமரி-தூத்துக்குடி (KTPL) இயற்கை எரிவாயு குழாய் திட்டத்திற்காக ₹2,448.70 கோடி முதலீட்டிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவின் கொச்சியில் தொடங்கி, திருவனந்தபுரம் வழியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களை இணைக்கிறது.

தூத்துக்குடி மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், மின் உற்பத்தியாளர்கள் மற்றும் உர நிறுவனங்களுக்குச் சிக்கனமான மற்றும் தூய்மையான இயற்கை எரிவாயு கிடைப்பதை உறுதி செய்தகிறது.

இதனால் சுற்றுசூழல் பாதுகாப்பு கிடைக்கிறது,நிலக்கரி மற்றும் பிற பாரம்பரிய புதைபடிவ எரிபொருட்களுக்கு (Fossil Fuels) மாற்றாக இயற்கை எரிவாயுவை வழங்குவதன் மூலம் கார்பன் உமிழ்வைக் (Carbon Footprint) குறைத்தல்.

கேரளாவில் கனமழை ஆரஞ்சு அலர்ட்

கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்தது.

சர்வதேச அமைதி தினம்

செப்டம்பர் 21 உலக அமைதி தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் சர்வதேச ரோஜா தினம் கடைப்பிடிக்கப்பட்டது

டெல்லி வாக்காளர் பட்டியல் சீரமைப்பு

டெல்லியில் தீவிர வாக்காளர் பட்டியல் சீரமைப்பு (SIR) பணிகளின் முதல் கட்டத்திற்குப் பிறகு, 42%-க்கும் அதிகமான நோட்டீஸ்கள் முந்தைய தரவுகளுடன் முகவரி மற்றும் பெயர் பொருந்தாத காரணத்தால் அனுப்பப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

டெல்லியில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணி, தற்போது அரசியல் மற்றும் சட்ட ரீதியாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜரிவால், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கபில் சிபல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

நோட்டீஸ் அனுப்பப்பட்ட காரணத்தினாலேயே ஒருவரின் பெயர் உடனடியாகப் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. நோட்டீஸ் பெற்றவர்கள் அக்டோபர் 29-க்குள் உரிய ஆவணங்களை (ஆதார், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற 12 சான்றுகளில் ஒன்றை) வழங்கித் தங்கள் விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம்.

அனைத்துச் சரிபார்ப்புகளுக்கும் பிறகு, டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4 அன்று வெளியிடப்பட உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *