இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -17.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 17.09.2026
பரபாவ வருடம் ஆவணி 31, வியாழக்கிழமை, September 17, 2026 பஞ்சாங்கம் –
திதி : 10:48 AM வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : அனுஷம் 07:53 PM வரை பிறகு கேட்டை
யோகம் : விஷ்கம்பம் 12:49 PM வரை, அதன் பின் ப்ரீதி
கரணம் : சைதுளை 10:48 AM வரை பிறகு கரசை 11:52 PM வரை பிறகு வனசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை
நல்ல நேரம் மாலை: 12.15மணி முதல் 01.15மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (17.08.2026)
மேஷம் -கவலை உண்டாகும்
ரிஷபம் -உதவி கிடைக்கும்
மிதுனம் -பெருமை சேரும்
கடகம் -பரிவு உண்டாகும்
சிம்மம் – குடும்பத்தில் அமைதி
கன்னி – ஊக்கம் அதிகரிக்கும்
துலாம்-ஆரோக்கியம் தேறும்
விருச்சிகம்-தொழில் உயர்வு
தனுசு – இன்பம் பிறக்கும்
மகரம் -எமாற்றம் உண்டாகும்
கும்பம் -வெற்றி நிச்சயம்
மீனம் -மன நிம்மதி
தந்தை பெரியார் பிறந்தநாள்
தந்தை பெரியார் என அன்புடன் அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமி (1879–1973), சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன் மற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை ஆவார். தமிழ்நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவர்.
மூடநம்பிக்கைகள், ஜாதிப் பாகுபாடுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, மக்கள் சுயமரியாதையுடனும் பகுத்தறிவுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுயமரியாதை 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
பெண்கள் கல்வி பெற வேண்டும், சொத்துரிமை பெற வேண்டும், பாலின சமத்துவம் நிலவ வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டார். தேவதாசி முறை ஒழிப்பு, கைம்பெண் மறுமணம், குழந்தை திருமண எதிர்ப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளித்தார். 1938-இல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் இவருக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

