ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -12.09.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 12.09.2026

பரபாவ வருடம் ஆவணி 26, சனிக்கிழமை, September 12, 2026 பஞ்சாங்கம் –

திதி : 07:46 AM வரை பிரதமை பின்னர் துவிதியை

நட்சத்திரம் : உத்திரம் 12:55 PM வரை பிறகு அஸ்தம்

யோகம் : சுபம் 03:08 PM வரை, அதன் பின் சுப்ரம்

கரணம் : பவம் 07:46 AM வரை பிறகு பாலவம் 07:23 PM வரை பிறகு கௌலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (11.09.2026)

மேஷம் -பயணம் உண்டாகும்

ரிஷபம் -நன்மை பெருகும்

மிதுனம் -ஆதாயம் பெருகும்

கடகம் -செலவு உண்டாகும்

சிம்மம் -மேன்மை அதிகரிக்கும்

கன்னி -விவேகம் உண்டாகும்

துலாம் -பொறுமை அவசியம்

விருச்சிகம்-நிம்மதி பெருகும்

தனுசு -தெளிவு பிறக்கும்

மகரம் -ஆரோக்கியத்தில் நலம்

கும்பம் -தொழில் உயர்வு

மீனம் -பாராட்டு கிடைக்கும்

இன்றைய நாளின் சிறப்பு

சந்திர தரிசனம் என்பது அமாவாசைக்கு பின் வரும் இரண்டாம் நாளில் (துவிதியை திதி) மாலையில் தென்படும் பிறை சந்திரனை வழிபடும் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாகும்.

ஜோதிடத்தில் சந்திரன் “மனோகாரகன்” (மனதிற்கு அதிபதி) எனப்படுகிறார். சந்திர தரிசனம் செய்வதால் மன அழுத்தம், குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.

சந்திரன் உடலின் இரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்தைக் கட்டுப்படுத்துபவர். இவரை வழிபடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அமாவாசை முடிந்த இரண்டாம் நாள் மாலையில் (சூரிய அஸ்தமனத்திற்குப் பின் 6:00 PM முதல் 7:00 PM வரை) மேற்குத் திசையில் பிறை சந்திரனைப் பார்க்கலாம்.

பிறை சந்திரனைப் பார்த்தவுடன் கைகூப்பி வணங்க வேண்டும்.​”ஓம் சந்திராய நமஹ” அல்லது “ஓம் சோமாய நமஹ” என்ற மந்திரத்தை 108 அல்லது 12 முறை உச்சரிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *