திருப்புகழ் பாடல் 305 குன்றுதோறாடல்
திருப்புகழ் பாடல் 305 முருகரிடம் சரணாகதி அடைய மனம் எவ்வாறு பயணிக்கும் என்பதை விளக்கப்பட்டுள்ளது.
அப்பன் முருகனை எண்ணி அவன் அருளாலே அவன் புகழ் பாடுவது என்பது அடியேனுக்கு கிடைத்த பாக்கியம் என முருக பக்தர்கள் முருகனுடைய மந்திரங்கள் பாடல்களை பாடி வருகின்றார்கள். நாமும் இதுவரை திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய திருப்புகழ் பாடலில் உரையை காண்போம்.

தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு …… கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம …… யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய …… விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் …… வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர …… அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு …… றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக ……எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய …… தம்பிரானே.
புவியில் மக்கள் ஆசையை தூண்டும் காம எண்ணங்களை அதிகரிக்கும் விலை மாதர்கள் மீது ஆர்வம் கொண்டு அவர்கள் மீது மயக்கம் ஏற்பட்டு சவளை பிள்ளையை போல் மயக்கம் கொல்கின்றோம் என்கின்ற பதமானது சொல்லப்பட்டுள்ளது. அதாவது பறவை இடம் மாறும் அதுபோல பறந்து திரியும் ஞானிகள் உடைய மௌன நிலை அது ஒரு பெரிய ரகசியம் என்றே சொல்லலாம். மூச்சை அடக்கி சிவ சக்தியை விலக்கி சொல்லுவது சிரமம் என்றாலும் அது அனைவராலும் அடைய முடியாது எனினும் மிக நம்மால் அதை நினைத்து கூட பார்க்கவும் முடியாது. ஆம் அத்தனை மிகவும் உயர்வானது கருணை பரம்பொருளான மனதை கொடுக்கும் சமாதி நிலையை பெறுவது என்பது நீ அருள் தந்தால் தான் கிடைக்கும். முருகா தருவாய அந்த அருளை இவ்வாறு கருணை கலந்த மூர்த்தியே நீ கடலெனின் பெரிய அலைகளைப் போல் இருக்கின்ற முருகப்பெருமானை நீர் குடகு நாட்டில் இருந்து வரும் காவிரி ஆறு மற்றும் கடலோடு ஒப்பிட்டு மலை மீது வீற்றிருக்கும் வீரம் போல வீடுகளின் நாயகனாகிய நீ ஆதி கணபதிக்கு தம்பியான நீ காவிரிக்கு நாயகனார் நீ அழகரும் தெய்வம் நீ பார்வதியின் மகனான சிவபெருமானுடைய குரு மூர்த்தி உன்னுடைய அருள் பெற்று வாழ அருள் தருவாயாக என்று முருகனைப் பற்றி சரணாகதி அடைதல்.

