ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

சுப ஓரை இல்லையா செவ்வாய் ஓரை பார்போமா

வாழ்க வளமுடன், வாழ்க வையகம், செழிக்கட்டும் விவசாயம் சீர் படட்டும் நிர்வாகம். விழிப்புணர்வோடு இருந்து வாழ்வின் வளத்தை பெற்று வளமுடன் வாழ்வோம். இன்றைய நாளில் செவ்வாய் ஓரை காலை சூரிய உதயம் நேரத்தில் தொடங்குகின்றது. பொதுவாக வாழ்வில் நாம் வெற்றி பெற நமது மோசமான தச புத்தி காலத்தில் நமக்கு கடினமான சூழலில் உதவுவது ஓரை பார்த்து செய்யும் காரியம். இன்று செவ்வாய் ஓரை பார்ப்போமா.

செவ்வாய் ஓரை

செவ்வாய் ஓரை இன்று இன்று காலை சூரிய உதயம் முதல் தொடங்குகின்றது காலை 6 மணி முதல் ஏழு மணி வரை மற்றும் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை மீண்டும் மாலை 6 மணி இரவு எட்டு மணி என்று செவ்வாய் ஓரை வரும். செவ்வாய் ஓரை சுப ஓரை அல்ல இது அசுப ஓரை என்றும் சொல்லப்படுகின்றது. நல்ல காரியங்களைப் பற்றி செவ்வாய் ஓரையில் சிந்திக்க மற்றும் செய்யவும் முடியாது.

செவ்வாய் ஓரையில் செய்ய வேண்டாம்

செவ்வாய் ஓரை காலையில் தொடங்குகின்றது. இந்நேரத்தில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது அது குறித்து சிந்திக்கவும் வேண்டாம். வீடு மற்றும் அலுவலகம் நண்பர்கள் சமூகம் ஆகிய இடங்களிலும் கவனமுடன் செயல் படுதல் சிறப்பு தரும். பிரச்சனைகள் சிக்கல்கள் ஏற்பட்டால் அது மீண்டும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கிவிடும் ஆகையால் செவ்வாய் ஓரை நேரத்தில் கவனமுடன் விழிப்புணர்வுடன் இருத்தல் நலம் பயக்கும்.

செவ்வாய் ஓரை காலத்தில் செய்ய வேண்டியது

செவ்வாய் ஓரையில் பொதுவாக பிரச்சனைகள் உருவாக்கும் இது சுப ஓரை அல்ல என்றும் பேசியிருக்கின்றோம் இருப்பினும் இந்த செவ்வாய் ஓரையில் நிலம் வாங்குவது விற்பனை செய்யலாம் என்றும் சொல்லப்படுகின்றது. மேலும் செவ்வாய் ஓரை நேரத்தில் ரத்த தானம் செய்யலாம் மற்றும் மருத்துவ பணிகள் செய்யலாம் அத்துடன் பங்காளி சொத்து பகிர்வு ஆகியவற்றை செய்யலாம் என்றும் சொல்லப்படுகின்றது. செவ்வாய் ஓரை நேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

ராசிக்காரர்களே பாத்துக்கோங்க உங்கள் ஓரை வெற்றி நேரம்

மேஷ ராசிக்காரர்கள்

சூரிய ஓரை, சந்திர ஓரை பயன்படுத்தலாம். மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை அதிர்ஷ்டம் தரும் ஓரை என்றால் சூரிய ஓரை, சந்திர ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரை அமையும். மேஷ ராசிக்காரர்கள் புதிய முயற்சியை சூரிய ஓரை, சந்திர ஓரை, குரு ஓரை, சந்திர ஓரை நாட்களில் தொடங்கலாம் அது முன்னேற்றத்தை கொடுக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் ஓரை

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய் ஓரை, சந்திர ஓரை, சுக்கிர ஓரை ஏற்றது ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்

மிதுன ராசிக்காரர்கள் மென்மையான குணம் கொண்டவர்கள் இவர்களுக்கு உரிய ஓரை நேரமாக அமைவது புதன் ஓரை மற்றும் சுக்கிர ஓரை சனி ஓரை ஆகும்.

கடக ராசிக்காரர்கள்

கடக ராசிக்காரர்கள் வாழ்வில் கடையில சூழலை கடக்கும் வல்லமை கொண்டவர்கள். கடக ராசிக்காரர்கள் சந்திரன் சுக்கிரன் குரு ஓரைகள் உரியவர்களாக இருக்கின்றார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள்

ஆளுமையும் அடங்காத குணமும் வெற்றியும் பெரும் சிம்ம ராசிக்காரர்கள் இரு ஓரைகள் சாதகமாக கொண்டவர்கள் சூரிய ஓரை மற்றும் சந்திர ஓரை குறிப்பிட்ட முறை காலங்களில் குலதெய்வ உதவியோடு செயல்பட வேண்டும் காரிய சித்தி ஆகும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் பறந்து விரிந்து தொலைநோக்குடன் செயல்படுபவர்கள். கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு உரிய ஓரைகளாக சந்திர ஓரை,புதன் ஓரை சுக்கிரன் ஓரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள்

துலாம் ராசிக்காரர்கள் எதையும் ஆராய்ந்து உற்று நோபவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு செவ்வாய் ஓரை குரு ஓரை சனி ஓரை வெற்றி தரும்.

மேலும் படிக்க : சுப காரியங்களுக்கு பொருந்தாதாது சனி ஹோரை -எதிலும் கவனம் வேண்டும்

விருச்சிக ராசிக்காரர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் சந்திர ஓரை மற்றும் குரு ஓரை சுக்கிர ஓரைகளில் அனுகூலத்தை பெறுவார்கள். திங்கள் கிழமை சந்திர ஓரை தொடங்கும் வியாழக்கிழமை குரு ஓரை தொடக்கம் மற்றும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை தொடக்கம் இந்த குறிப்பிட்ட நாட்கள் உங்களுக்கான ஓரைகள் உதயம் ஆகும்.

தனுசு ராசிக்காரர்கள்

தனுசு ராசிக்காரர்கள் சூரிய ஓரை செவ்வாய் ஓரை மற்றும் குரு ஓரை சுக்கிர ஓரைகளை தங்களுக்கு சாதக உரைகளாக கொண்டவர்கள் ஆவார்கள். குறிப்பிட்டுள்ள முக்கிய ஓரை நேரங்களில் தனுசு ராசிக்காரர்கள் தங்களது சுப நிகழ்வுகளை அல்லது குறிப்பிட்ட முக்கியமான வியாபார நிகழ்வுகளை நடத்திக் கொள்ளுங்கள்.

மகர ராசிக்காரர்கள்

மகர ராசிக்காரர்கள் செவ்வாய் ஓரை, சந்திர ஓரை மற்றும் புதன் ஓரை சுக்கிர ஓரைகளை தங்களுக்கு உரிய ஓரைகளாக பெற்றுள்ளனர்.

கும்ப ராசிக்காரர்கள்

கும்ப ராசிக்காரர்கள் சந்திர ஓரை, செவ்வாய் ஓரை, புதன் ஓரை, சுக்கிர ஓரைகளில் சாதகமான நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம்.

மீன ராசிக்காரர்கள்

மீன ராசிக்காரர்கள் சூரிய ஓரை, செவ்வாய் ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரைகள் அனுகூலத்தை கொடுக்கும்.

ஓரைகள் நேரம் காலம் மற்றும் ராசிக்குரியது சுப, அசுப என பல்வேறு காலகட்டத்திற்கும் ஏற்ப நமக்கு உதவி செய்யும் இதனை பற்றி தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *