சமையல் குறிப்புமருத்துவம்வாழ்க்கை முறை

வெப்பத்தை கட்டுப்படுத்தி உள்ளம் தெளிவு தரும் பாசிப்பயறு கஞ்சி

இன்றைய காலகட்டத்தில் அதி வேகமாகபயணித்துக் கொண்டிருக்கின்றோம். காலநிலை மாற்றத்தினால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாக இருக்கின்றோம். கோடை காலம் முடிந்த பின்பும் இன்னும் தமிழ்நாட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்த வண்ணமே இருக்கின்றது. இது ஒரு விதத்தில் மக்களுக்கு உளவியல் ரீதியாக எரிச்சல் மற்றும் அசவுகரியம் கோபம் ஏற்படுத்துகின்றது. இதனைத் தவிர்க்க பாசிப்பயிறு கஞ்சி காலை வேலையில் குடித்தால் சிறப்பு தரும்.

பாசிப்பயிறு கஞ்சி பலன்கள்

அரிசி நாலு பங்கு மற்றும் ஒரு பங்கு பாசிப்பயிறு சேர்த்து செய்யும் பாசிப்பயறு கஞ்சியில் உடலில் வெப்பம் கட்டுப்பாடு மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அத்துடன் உளவியல் ரீதியான வெப்பம் கோபம் மற்றும் எரிச்சல் உணர்வுகள் அனைத்தும் மாற்றம் பெற்று உடலுக்கு மனதுக்கும் புத்துணர்வு அதிகரிக்கச் செய்யும் பாசி பயறு கஞ்சி செய்து சாப்பிட்டு வாருங்கள் நன்மையை பெறலாம்.

பாசிப்பயிறு கஞ்சி செய்து பார்க்கலாமா

பாசிப்பயிறு கஞ்சி முந்தைய நாளில் மாலை வேலையில் நீரில் ஒரு பங்கு ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலை பாசிப்பயிறு ஒரு பங்கு மற்றும் உடன் நான்கு பங்கு அரிசி அத்துடன் சீரகம், சிறிதளவு சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து பின்பு கஞ்சிப் பத தண்ணீர் சேர்க்க வேண்டும். மூன்று விசில் விட்டு அதனை இறக்கி சாப்பிட்டு வர உடல் மற்றும் மன மாற்றத்தை எளிதில் உணரலாம்.

பாசிப்பயறு கஞ்சி

சரிவிகித பாசிப்பயிறு கஞ்சி

உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சரிவிகித உணவு கொடுக்கும் ஆரோக்கிய கஞ்சியாக பாசிப்பயிறு கஞ்சி இருக்கின்றது. இதனை சாப்பிட்டு வர உடல் மற்றும் உள்ளம் தெளிவு பெறுவதுடன் ஆற்றல் அதிகரித்து செயல்பாட்டில் ஊக்கம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *