தண்ணிக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன கனெக்சன்????
20 வருடத்திற்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்து முன்னணி நடிகையாக தற்பொழுதும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது கடின உழைப்பாலும், தொடர் முயற்சியாலும் 20 வருடத்தை கடந்தாலும் தற்பொழுதும் ரசிகர்களின் முன்னணி நடிகையாக உள்ளார். இதனால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வென்றார். பல திறமைகளை கொண்ட நயன்தாரா இருபது வருடம் தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு முன்னேற்றத்தில் அவரது திறமை வெளிப்பட்டதோடு சேர்ந்து அவரது அழகும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

முதலில் நயன்தாரா எப்படி இருந்தார் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்று பார்த்தால் இருபது வயது அதிகமானது போல் தெரியாது ஏதோ இருபது வயது குறைந்தது போல் தான் தோணும். அப்படி அவரின் அழகின் ரகசியம் என்னவாக இருக்கும் என்று பலரும் நினைத்து ஆச்சரியப்பட்டு இருப்போம். நயன்தாரா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது சருமத்திற்கு ஆயுர்வேத பொருட்களை இயற்கை முறையில் செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார் . எதிலும் சிறந்து விளங்கும் நயன்தாரா தனது சரும அழகிற்கு தினமும் பல செயல்களை செய்வதுண்டு ,அவை அனைத்தும் இயற்கை முறையில் தயார் செய்யும் பொருட்களே.

மிக அதிகமாக செலவு செய்து பாவனை செய்வது நயன்தாராவிற்கு பிடிக்காதாம். எளிமையான பொருட்களை வைத்து தன்னை அழகு படுத்திக் கொள்கிறார். இப்படி இருக்கும் பொழுது அவரின் அழகிற்கு அவரின் சரும பொலிவிற்கு இன்னொரு விஷயமும் மிக முக்கிய காரணமாக உள்ளது. அது என்னதான் அப்படின்னு முதல்ல சொல்லுங்க அப்படின்னு நீங்க யோசிக்கிறது தெரியுது. வேற ஒன்னும் இல்ல நம்ம அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் பயன்படுத்தும் தண்ணி தான் அவர் அழகுக்கு காரணமா அப்படின்னு நினைக்கிறீங்களா.
மேலும் படிக்க : பிகில் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆமாம் நாம எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்து நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் பொலிவுடன் காணப்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல நாம் உள்ளே செய்யும் ஒரு செயல்தான் வெளியில் அழகாக காட்சியளிக்கிறது. சூப்பர் ஸ்டாரின் அழகிற்கு முக்கிய காரணமாக விளங்குவது தண்ணீர் தான் அவர் தினமும் அதிக தண்ணீர் எடுத்துக் கொள்வதில் மிக கவனமாக இருப்பாராம் வெளியில் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில் இல்லாமல் செல்ல மாட்டாராம் . அந்த அளவிற்கு தண்ணீருக்கு நயன்தாரா முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் இதுவே அவரின் அளவிற்க்கு ஒரு காரணமாக உள்ளது.
மேலும் படிக்க : நயன்தாரா சொல்லும் நச்சுனு நாலு டிப்ஸ்