வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா.. கணவர் இறப்பிற்கு இதுதான் காரணமா???
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வளம் வந்தவர் நடிகை மீனா. தனது கண்களின் கவர்ச்சியால் தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்து கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிறு வயது முதலி நடித்த அவருக்கே கதாநாயகியாக நடித்தும் வந்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்து வந்த அனைத்து படங்களும் நல்ல வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. மீனா தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாள படங்களிலும் அதிகமாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு முன்னணி ஆகியாக பலம் வந்த நடிகை மீனாவிற்கு பெங்களூருவை சேர்ந்த வித்தியாசாகர் என்பவர் உடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் இனிதே நடைபெற்றது இவர்களின் காதலை நினைவாக நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது மீனாவின் குழந்தை நைனிகாவும் அம்மாவைப் போலவே குழந்தை நட்சத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றுள்ளார். இவரது மகள் நைனிகா தெறி படத்தில் தளபதி விஜய்க்கு மகளாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.
மேலும் படிக்க : கும்கி போய் காடன் வருவதை பாருங்க

இவ்வாறு இவர்கள் வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்த நேரத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி கடந்த ஒரு வாரமாக இணையத்தில் வைரலாகி கொண்டு உள்ளது. ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்தபோது வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்து வந்ததாகவும் இதனால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கொரோனாவும் புறாக்களின் எச்சத்தினால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பும் ஒன்று சேரவே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நிலையில் பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு மீனா எவ்வாறு வாழ்க்கையை வாழப் போகிறார் என்று பலரும் அவர் மீது பரிதாபப்பட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது நடிகை மீனா திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஆனால் தற்போது சில படங்களில் ரியின்றி கொடுத்து நடித்து வருகிறார் தனது மகளும் படங்களில் நடித்து பாராட்டைப் பெற்று வருகிறார் இது தனது கணவர் வித்யாசாகருக்கு பிடிக்காமல் இவர்களுக்குள் சண்டை ஏற்படவே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மன கசப்பின் காரணமாகவே மனமுடைந்து வித்யாசாகருக்கு மரணம் ஏற்பட்டு விட்டதாக வதந்திகள் பரப்பி வருகின்றனர் இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்முறையாக தனது கணவர் இறப்பிற்கு பிறகு நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதாவது எனது அன்பான காதல் கணவரைப் புரிந்து நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.
மேலும் படிக்க : பாகுபலி அடுத்து ஆதிபுருஷ்ஷில் பாக்கலாமுங்க்

கணவர் இல்லாமல் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் மன உளைச்சலில் உள்ள இந்நேரத்தில் எங்கள் மனம் புண்படும்படி வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எங்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு கொஞ்சமாவது மதி படியுங்கள் இப்படிப்பட்ட சூழலில் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்கள் மீது பரிதாபப்பட்டு ஆறுதல் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முதல்வர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்,IAS, எனது நண்பர்கள் என்னுடன் இருக்கும் உறவினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எனது ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலைகள் உள்ளவர்களுக்குஉதவி செய்யாமல் இருந்தால் கூட அவர்கள் மனம் மேலும் புண்படும்படி நடந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும். நடிகை மீனாவின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு இரக்கம் கொண்டாவிட்டாலும் அவரின் மன வேதனையை புரிந்து கொண்டு அனைவரும் அமைதியாக இருந்தாலே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும் அதுவே அவருக்கு பெரும் ஆறுதலாக அமையும்.