தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் அதிக கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கை தருகின்றது.
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கனத்த மழை பெய்யும் வாய்ப்பு இருக்கின்றது.
மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தாழ்வானப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குமரி கடல் வழியே புயல் உருவாகும் அதன் காரணமாக மழை அதிகரிக்கும். தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலும் வாய்ப்பிருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் கன மழை பெய்யலாம்.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை
டிசம்பர் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது. புயல் காரணமாகத் தமிழகத்தில் பலத்த மழை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
புரெவி புயல் குமரிக்கண்டத்தில் உருவாகும்
குமரிக்கண்டம் வழியாக உருவாகும் புயலானது இலங்கை வழியாகக் கரையை கடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கனத்த மழை இடி மின்னலுடன் பெய்யும். மேலும் காற்றானது 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது இதற்கு அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது அரசு தரப்பு தகவல்கள் கிடைக்கின்றன