ரவீந்திரநாத் தாகூர் பற்றிய ஒரு பார்வை
ரவீந்திரநாத் தாகூர் மே 7, 1861 ஆம் வருடம் பதினான்காவது குழந்தையாக கல்கத்தாவில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். தன் ஏழாவது வயதில் கவிதை எழுத தொடங்கியவர். ஆங்கிலம், வடமொழி, கணிதம், அறிவியல், வங்காளம், உடற்பயிற்சி, ஓவியம், இசை என்ற தனது எல்லாக் கலைகளையும் கற்றார்.
- ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் தாகூர்.
- ஏழாவது வயதில் கவிதை எழுத தொடங்கியவர்.
- 80 வயதில் ஒரு கவிதையைச் சொல்லி, கண் மூடிய ஒரு மணி நேரத்தில் மரணத்தைத் தழுவினார் தாகூர்.

தாகூரின் படைப்பு முதலிடம்
வங்காள மொழியின் முதல் சிறுகதையும், நகர் தொகுதியில் 1877 ஆம் ஆண்டு வெளியான தாகூரின் படைப்பு முதலிடம் பெற்றது. இங்கிலாந்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்று அடுத்த படிப்பு பிடிக்காமல் இரண்டே வருடத்தில் இந்தியாவிற்குத் திரும்பினார். தனது 22 வயதில் திருமணம் முடிந்து குடும்ப நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார்.
ஆசிரமப் பள்ளியை நிறுவிய தாகூர்
1901 ஆம் வருடம் சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவி அங்கேயே தங்கினார். தாய்மொழியில் படிப்பு கற்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு தோட்டவேலை, உடற்பயிற்சி, சமூக வேலை, விளையாட்டு என்ற அத்தனை கலைகளும் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வங்கத்தின் இரண்டாக பிரிக்க முயன்ற போது சுதந்திர போராட்டத்தில் நேரடியாக இறங்காமல், தலைமையேற்று போராட்டத்தில் இறங்கினார் தாகூர்.

போராட்டத்தில் இறங்கிய தாகூர்
அப்போது காங்கிரஸ் கட்சியில் தீவிரவாதம், மிதவாதம் என பிரிவினைகள் தோன்றிய போது முஸ்லிம், இந்துக்கள் பிரச்சினைகளும் தலை தூக்கின. இதனால் அரசியலில் இருந்து வெளியேறினார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நேரத்தில் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் எழுதிய ‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு, 1913 ஆம் ஆண்டு உலகின் மிக உயரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கினர்.
அப்போது இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தாலும், மற்றொரு புறம் வயிறு எரியும் இலக்கியவாதிகளும் இருக்கத் தான் செய்தார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படாமல் இருந்தால் கீதாஞ்சலி பரிசு கிடைத்திருக்குமா?, இந்த விருது ஆங்கிலேயர்கள் வாங்கி கொடுத்தாரா? என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆவேசமடைந்த தாகூர்.
‘பலமாக தட்டு பவன் தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்’
நம் நாட்டில் என் கவிதை போற்றப் படவில்லை. அதனால் உலக அளவில் வெற்றி பெற விரும்பி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். வெற்றிக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும், பலர் இதனை அறிவதில்லை. ‘பலமாக தட்டு பவன் தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்’ என்று பதில் கொடுத்தார். கீதாஞ்சலி பரிசு கிடைத்ததால், ஆங்கில அரசும் ‘சர்’ பட்டம் கொடுத்து கௌரவித்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1919 ஆம் ஆண்டில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அதிர்ச்சியடைந்த தாகூர். உடனே ஆங்கில அரசின் பட்டத்தைத் தூக்கி எறிந்து, ‘தான் ஆங்கிலேயரின் விசுவாசி அல்ல’ என்பதை வெளிப்படுத்தினார். காந்தியுடன் நட்போடு இருந்தாலும் கைராட்டை மூலம் சுதந்திர பெறுவதை விரும்பாமல், ‘பலமாக தட்டு பவன் தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்’ என்று உரக்கச் சொன்னார்.
60 வயதில் உலகிலேயே மிகச் சிறந்த கல்வி கூடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. விசுவ பாரதி என்ற உலகப் பல்கலைக் கழகத்தை சாந்தி நிகேதனத்தில் உருவாக்கி நோபல் பரிசுடன் கிடைத்த பணம், தனது சொத்துகள் மற்றும் புத்தக உரிமைகளையும் இந்த பல்கலைக்கழகத்திற்கு எழுதி வைத்தார்.

மரணத்தைத் தழுவிய ரவீந்திரநாத் தாகூர்.
மரணம் வந்து கதவை தட்டும் நாளில் நீ என்ன செய்வாய்? என்று ஒரு கவிதையில் கேள்வி கேட்டு, ‘வந்த என் விருந்தாளியின் முன்னே நிறைய என் வாழ்க்கையை பரிமாறுவேன்’,’வெறும் கையுடன் திரும்ப விடவே மாட்டேன்’ என்று பதில் சொல்லியிருப்பார் தாகூர்.
80 வயதில் ஒரு கவிதையைச் சொல்லி முடித்து, கண் மூடிய ஒரு மணி நேரத்தில் அமைதியாக மரணத்தைத் தழுவினார் ரவீந்திரநாத் தாகூர்.