வானிலை ஆய்வு மையம் தகவல் : இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

- வானிலை ஆய்வு மையம் தகவல் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
- வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது.
- மயிலாடுதுறை புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளன.

கடலூர் மற்றும் நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் போன்ற 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. வெப்பச்சலனம் காரணமாக இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்.