குறைந்த விலையில் வீடு, சொத்து வாங்க எஸ்பிஐ வழங்கும் சூப்பர் வாய்ப்பு!
எஸ்பிஐ வங்கியின் மெகா ஆன்லைன் ஏலம் செப்டம்பர் 30 நடைபெறவிருக்கிறது. மார்க்கெட் விலையை காட்டிலும் மிகக் குறைந்த விலைக்கு வீடு, பிளாட், கடை போன்ற சொத்துக்கள் வாங்க எஸ்பிஐ வங்கி அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதற்கு சம்பந்தமான தேவையான ஆவணங்கள் சொத்துக்கான எம்டி டிஜிட்டல் கையொப்பம், இமெயிலுக்கு அனுப்பப்பட்ட ஐடி மற்றும் பாஸ்வேர்ட், ஆதார் ஆவணங்கள் போன்றவை தேவையான ஆவணங்கள் ஆகும்.

ஏலத்தில் பங்கேற்பதற்கு
ஏலத்தில் பங்கேற்பதற்கு அருகிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று ஏலத்தில் பங்கேற்க அல்லது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஏலத்தில் பங்கேற்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஆன்லைனில் ஏலத்திற்கு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை எஸ்பிஐ ஆன்லைனில் ஏலத்திற்கு விடுகின்றன. தொழில் ஆலைகளும் ஏலத்திற்கு வருகின்றன. வீடுகள், வணிக நிலையங்கள், பிளாக், கடைகள் என்று ஏலத்திற்கு வருகிறது. இவை ஏலத்தில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி அட்டகாசமான
குறைந்த விலையில் வீடு அல்லது சொத்து கிடைத்தால் தவிர்க்க முடியுமா? இதற்காகவே எஸ்பிஐ வங்கி அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சொந்த வீடு வாங்குவது பலருக்கும் பெரும் கனவாக இருக்கலாம்.

இதற்காக வீட்டுக் கடன் போன்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். அவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். எஸ்பிஐ வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவது குறித்த இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.