உ. பியில் தொழிலாளர்களுக்கு கிடைத்த பேரானந்தம் என்ன தெரியுமா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் 1862 ஐ சேர்ந்த வெண்கலம் மற்றும் வெள்ளி நாணயங்கள் நிறைந்த குடம் ஒன்றை கண்டுபிடித்ததாக தகவல் வெளியானது.
இந்நாணயங்கள் 1862 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று தெரிகிறது. தொழிலாளர்களிடம் சில நாணயங்களை போலீசார் மீட்டதாக கூறப்பட்டுள்ளது. சபியூர் கருவூலத்தில் டெபாசிட் செய்ததாக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் எஸ்டிஎம் ராஜேந்திர பிரசாத் கூறினார்.

தொழிலாளர்களிடம் நாணயங்கள் இருக்கக்கூடும். இவை விரைவில் மீட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் ஒரு கட்டிடத்திற்கான அடித்தளத்தை தோண்டும் போது 287 வெண்கல நாணயங்கள் 17 வெள்ளி அடங்கிய குடத்தை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குடத்தை கண்டுபிடித்தவுடன் இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், சில நாணயங்களை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கண் ஹாவ் கிராமத்திற்கு நெருக்கமான டவுண்டியா கெடா அக்டோபர் 2013 ஆம் ஆண்டு ஒரு புதையலை கண்டுபிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.